இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்
கராச்சியில் நடந்த இரண்டாவது போட்டியில் வென்றதன் மூலம், ஒருநாள் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியது.
இலங்கை-பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கராச்சியில் இன்று நடந்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய தொடக்க வீராங்கனைகளான முனீபா அலி மற்றும் சிட்ரா அமீன் இருவரும் அபாரமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். முனீபா அலி 56 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஒஷாடா ரணசிங்கே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
Ton-up Sidra Amin powers Pakistan to 253/2 ?
— Pakistan Cricket (@TheRealPCB) June 3, 2022
This is Pakistan's highest team total at home ?
? @TheRealPCB_Live
Watch Live ➡️ https://t.co/zpGnRoYYdO
#⃣ #PAKWvSLW | #BackOurGirls pic.twitter.com/7Oe0FF1MMB
அவரைத் தொடர்ந்து சதம் விளாசிய சிட்ரா அமீன் 123 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். கேப்டன் மரூப் 36 ஓட்டங்கள் எடுக்க பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 253 ஓட்டங்கள் எடுத்தது.
பின்னர் களமிறங்கிய இலங்கை அணி வீராங்கனைகள் சொற்ப ஓட்டங்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக ஹர்ஷிதா 41 ஓட்டங்களும், கவிஷா 32 ஓட்டங்களும் எடுத்தனர். இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 180 ஓட்டங்கள் மட்டுமே எடுத்ததால், பாகிஸ்தான் அணி 73 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
??: 79/3 after 25 overs
— Pakistan Cricket (@TheRealPCB) June 3, 2022
Sri Lanka require 175 runs off 150 balls for victory
? @TheRealPCB_Live
Watch Live ➡️ https://t.co/zpGnRoYYdO
#⃣ #PAKWvSLW | #BackOurGirls pic.twitter.com/KV2xFxkkct
பாகிஸ்தான் அணி தரப்பில் பாத்திமா சனா 4 விக்கெட்டுகளையும், ஒமைமா சொஹைல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.