தித்திக்கும் சுவையில் கேரளா பாலாடை பாயாசம்.., இலகுவாக செய்வது எப்படி?
கேரளா உணவுகள் என்றாலே நாம் அனைவரும் விரும்பி உண்ணுவோம்.
அந்தவகையில், கேரளாவின் பிரபலமான பாலாடை பாயாசம் இலகுவாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பாஸ்மதி அரிசி - ½ கப்
- பால் - 1 லிட்டர்
- சர்க்கரை - 1 கப்
- முந்திரி - 10
- பாதாம் - 10
- நெய் - 1 ஸ்பூன்
- ஏலக்காய் பொடி - ¼ ஸ்பூன்
செய்முறை
முதலில் அரிசியை நன்கு கழுவி 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும்.
இதற்கு பின்னர் அரிசியை மிக்ஸியில் அரைத்து அந்த மாவு மெல்லிய தட்டையாக மாற்றி வெயிலில் உலர வைத்து சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
இதனை அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அதில் நறுக்கிய பாலடையை சேர்த்து 10 நிமிடங்கள் வேகவைத்து வடிக்கவும்.
இப்போது ஒரு கடாயில் பாலை ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும், வேகவைத்த பாலடைகளை சேர்க்கவும்.
பாலடை மேலும் மென்மையாகி பால் சற்று கெட்டியாகும் வரை வேகவைத்து பின்னர் சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கிளறவும்.
இறுதியாக நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம் பருப்பை மேலே தூவினால் பாலாடை பாயாசம் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |