ஓணம் ஸ்பெஷல்: தித்திக்கும் சுவையில் பாலாடை பிரதமன்.., எப்படி செய்வது?
கேரளா உணவுகள் என்றாலே நாம் அனைவரும் விரும்பி உண்ணுவோம்.
அந்தவகையில், கேரளாவின் பிரபலமான பாலாடை பிரதமன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பாலாடை- ½ கப்
- சர்க்கரை- 1 கப்
- பால்- 5 கப்
- ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் பாலாடை சேர்த்து ஒரு முறை நன்கு கழுவி சுடுதண்ணீர் சேர்த்து ஊறவைத்துக்கொள்ளவும்.
பின் ஒரு வாணலில் 3 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் வைத்து கேரமல் செய்து பின் அதில் கால் கப் தண்ணீர் சேர்த்து கலந்து ஆறவைத்துக்கொள்ளவும்.
அடுத்து இதில் பால் சேர்த்து கலந்துவிட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்கவைக்கவும்.
பால் நன்கு கொதித்து வந்ததும் இதில் ஊறவைத்த பாலாடை சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்.
இறுதியாக நன்கு கெட்டியாகி வந்ததும் இதில் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான பாலாடை பிரதமன் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |