இஸ்ரேல்-ஹமாஸ் போரில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு! முன்னாள் Porn நடிகை மியா கலிஃபாவை அதிரடியாக நீக்கிய கனேடிய ஒலிபரப்பாளர்
இஸ்ரேல் மீதான தாக்குதலில் பாலஸ்தீனத்தை ஆதரித்த மியா கலிஃபாவை, கனேடிய ஒலிபரப்பாளர் பாட்காஸ்ட் ஒப்பந்தத்தில் இருந்து நீக்கினார்.
1,200 பேர் உயிரிழப்பு
இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் இருதரப்பிலும் 1,200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
இந்தநிலையில், முன்னாள் Porn நடிகையான மியா கலிஃபா, இஸ்ரேல் - ஹமாஸ் மோதலில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து கருத்து பதிவிட்டார்.
மியா ஆதரவு
அவரது பதிவில், 'நீங்கள் பாலஸ்தீனியர்களின் பக்கம் இருக்காமல், பாலஸ்தீனத்தின் நிலைமையைப் பார்க்க முடிந்தால் நீங்கள் நிறைவெறியின் தவறான பக்கத்தில் இருக்கிறீர்கள். அதனை வரலாறு காலப்போக்கில் காண்பிக்கும்' என கூறியிருந்தார்.
அதேபோல் இன்னும் சில பதிவுகளில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருத்து கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து மியா கலிஃபாவுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில், கனேடிய ஒலிபரப்பாளரும் வானொலி தொகுப்பாளருமான Todd Shapiro அவருடனான வணிக ஒப்பந்தத்தை முறித்துள்ளார்.
இதன் காரணமாக மியா தனது சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை தவிர்த்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |