பிரித்தானியாவில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்: பயங்கரவாத சட்டத்தின் கீழ் 6 பேர் கைது!
பிரித்தானியாவில் பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்
பிரித்தானியாவின் முக்கிய நகரங்களான லண்டன் மான்செஸ்டர் மற்றும் கார்டிஃப் ஆகியவற்றில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பொது கூட்டங்கள் மற்றும் இணையதள சந்திப்புகளை நடத்திய 6 பேர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜூலை மாதம் 12 திகதி முதல் ஆகஸ்ட் 9ம் திகதி வரை மேல் குறிப்பிட்ட இடங்களில் கூட்டங்களை நடத்தியது மற்றும் செப்டம்பர் மாதம் 6ம் திகதி லண்டனில் கூட்டம் நடத்த திட்டமிட்டது ஆகியவை கீழ் 6 பேர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன் Zoom செயலி வழியாக ஆன்லைனில் ஜூலை மாதம் 10ம் திகதி முதல் ஆகஸ்ட் 21ம் திகதி வரை நடத்திய குற்றச்சாட்டுகளும் அடங்கும்.
பிரித்தானிய பொலிஸார் இந்த கைது நடவடிக்கையை செவ்வாய்க்கிழமை மேற்கொண்டுள்ளது.
அதே நேரத்தில் “Defend Our Juries” என்ற குழு பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டங்களை மேற்கொண்டது, அப்போது தங்களது 5 செய்தி தொடர்பாளர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |