லண்டன் நகரில் திரண்ட ஆயிரக்கணக்கான பாலஸ்தீன ஆதரவாளர்கள்: அதிகாரிகள் வெளியிட்ட முக்கிய தகவல்
பிரித்தானிய தலைநகர் லண்டனில் பாலஸ்தீன ஆதரவாளர் நேற்று மிகப்பெரிய போராட்டத்தை அரங்கேற்றியுள்ளனர்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர்
இஸ்ரேல் படைகளுக்கும், பாலஸ்தீனத்தின் காசா படைகளுக்கும் இடையே சண்டை நடைபெற்று வரும் நிலையில், இஸ்ரேலிய ராக்கெட்டுகள் காசா நகரை முழுவதுமாக சிதைத்து வருகிறது.
இஸ்ரேலிய ராக்கெட்டுகளால் உருக்குலைந்து கிடக்கும் காசா நகரத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The IDF is conducting massive airstrikes and completing preparations for a ground operation in the Gaza Strip, local media reported, citing a Defense Forces press release. pic.twitter.com/M90WWhssXT
— NEXTA (@nexta_tv) October 14, 2023
இதற்கிடையில், நேற்று 1 மில்லியன் பாலஸ்தீன மக்களை 24 மணி நேரத்திற்குள் காசாவின் வடக்கு பகுதியில் இருந்து தெற்கு பகுதிக்கு இடம்பெயருமாறு இஸ்ரேல் அழைப்பு விடுத்தது.
இதன்மூலம் பாலஸ்தீன மக்கள் அதிக அடர்த்தியாக வசிக்கும் வடக்கு காசா நகரத்தில் இஸ்ரேல் தனது தரைவழி தாக்குதலை தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளிவர தொடங்கியுள்ளது.
லண்டனில் மிகப்பெரிய போராட்டம்
இந்நிலையில், பிரித்தானிய தலைநகர் லண்டனில் பாலஸ்தீன ஆதரவாளர்கள் நேற்று மிகப்பெரிய போராட்டத்தை அரங்கேற்றியுள்ளனர்.
இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பாலஸ்தீன தேசிய கொடியுடனும், பாலஸ்தீனத்திற்கு ஒற்றுமையை தெரிவிக்கும் விதமாக பாலஸ்தீன் ஆதரவு கோஷங்களுடனும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
A huge Palestinian demonstration is taking place right now in #London
— NEXTA (@nexta_tv) October 14, 2023
Several thousand people gathered in the center of the British capital with Palestinian flags and slogans expressing solidarity with the Palestinians.
The country's authorities said that the demonstration of… pic.twitter.com/dTQixbXeUH
இது தொடர்பாக அதிகாரிகள் தெரிவித்த தகவலில், பிரித்தானியா மற்றும் மேற்கத்திய நாடுகளில் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட ஹமாஸ் மற்றும் அதன் கொடியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பாலஸ்தீனம் மற்றும் அதன் தேசிய கொடியை பயன்படுத்துவதில் எத்தகைய சட்ட விதிமீறலாகவும் இல்லை என தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |