லாஸ் ஏஞ்சல்ஸ் வரலாற்றில் பேரழிவு தீ: 29 வயது சந்தேக நபருக்கு 45 ஆண்டுகள் சிறையா?
அமெரிக்காவில் கொடிய காட்டுத்தீ விபத்தில் சந்தேக நபருக்கு 45 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அழிவுகரமான தீ விபத்து
லாஸ் ஏஞ்சல்ஸ் வரலாற்றில் 12 பேரைக் கொன்ற மிகவும் அழிவுகரமான தீ விபத்துகளில் ஒன்றைத் தூண்டியதாக, 29 வயதான ஜோனாதன் ரிண்டர்க்னெக்ட் குற்றம்சாட்டப்பட்டார்.
அவர் அக்டோபர் 7ஆம் திகதி அன்று தீ வைத்து சொத்துக்களை அழித்ததாக கைது செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து புதன்கிழமை அன்று, பெடரல் கிராண்ட் ஜூரி ஜோனாதன் மீது மேலும் இரண்டு குற்றச்சாட்டுகளை சுமத்தியது.
மூன்று குற்றச்சாட்டுகள்
அவர் வேண்டுமென்றே கொடிய பாலிசேட்ஸ் தீயை தொடங்கியதாகவும், மொத்தம் மூன்று குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் காரணமாக ஜோனாதன் 45 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்வார் என்றும் அவர்கள் கூறினர்.
நீதிமன்ற ஆவணங்களின்படி, பாலிசேட்ஸ் தீ விபத்து ஜனவரி 1ஆம் திகதி நள்ளிரவுக்குப் பிறகு, ஜோனாதன் பற்றவைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட சிறிய லாச்மேன் தீ விபத்து என்று அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |