கனடாவில் Mrs Canada World 2026 பட்டம் வென்ற இந்திய வம்சாவளி பெண்
Mrs Canada World 2026: இந்திய வாசவளியைச் சேர்ந்த பல்லவி முகீஜா கனடாவின் தேசிய அழகிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
பல்லவி முகீஜா
இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டம் கோராயா பகுதியில் பிறந்த பல்லவி முகீஜா, தற்போது கனடாவில் வசித்து வருகிறார்.
அவர், Mrs Canada World 2026 என்ற தேசிய அழகிப்போட்டியில் வெற்றி பெற்று, பட்டம் சூட்டப்பட்டுள்ளார்.
இந்தப் போட்டி, ஜூலை 25, 2026 அன்று பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே நகரில் உள்ள Bell Performing Arts Centre-இல் நடைபெற்றது.
கனடா முழுவதும் இருந்து வந்த 60-க்கும் மேற்பட்ட போட்டியாளர்களில், பல்லவி தனது நம்பிக்கை, தனித்துவம், மேடை நடிப்பு மற்றும் அழகிய தன்மையால் அனைவரையும் கவர்ந்தார்.
முன்னாள் Mrs Canada World ஃபாலன் சிலாந்தி பல்லவிக்கு பட்டம் சூட்டினார். மேலும், சமூக சேவையில் புகழ்பெற்ற சாம்மி (Sammy) அவருக்கு வெற்றிக் கச்சையை அணிவித்தார்.

நர்ஸ்
பல்லவி, கனடாவில் நீண்டகால பராமரிப்பு மையத்தில் பதிவு செய்யப்பட்ட நர்ஸ் ஆக பணியாற்றுகிறார். அவர், மூத்த குடிமக்களின் மனநலம் மற்றும் உணர்ச்சி நலனுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் சமூக சேவையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
பட்டம் வென்ற பின் பல்லவி கூறியதாவது: “இந்தக் கிரீடம் வெறும் சாதனை அல்ல, இது ஒரு சமூக நோக்கத்திற்கான மேடை. மூத்த குடிமக்கள் மதிப்பு பெற வேண்டும், அவர்களின் குரல் கேட்கப்பட வேண்டும் என்பதற்காக நான் தொடர்ந்து பாடுபடுவேன்” என தெரிவித்தார்.
அவர், Mrs Canada World 2026 பட்டம் பெற்றவராக, கனடாவை உலகளவில் பிரதிநிதித்துவப்படுத்தும் போது, சமூக சேவையிலும், கருணை மற்றும் பொறுப்புணர்வுடன் செயல்படுவேன் என உறுதியளித்துள்ளார்.
இந்த வெற்றி, பஞ்சாப் மாநிலத்திற்கும், இந்திய வம்சாவளியினருக்கும் பெருமை சேர்த்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |