காரசாரமான சுவையில் பள்ளிபாளையம் சிக்கன்: ரெசிபி இதோ
தென்னிந்திய சமையலில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு உணவு பிரசித்தி பெற்றதாக இருக்கும். அந்த வரிசையில் பள்ளிபாளையம் சிக்கன் ரெசிபியை நம்மில் பலரும் கேள்விப்பட்டிருப்போம்.
நல்ல காரசாரமாக, வித்தியாசமாக சிக்கன் சாப்பிட வேண்டும் என நினைப்பவர்கள் கண்டிப்பாக பள்ளிபாளையம் சிக்கனை செய்து சாப்பிட்டு பாருங்கள்.
இந்த பள்ளிபாளையம் சிக்கனை ஹொட்டல் ஸ்டைலில் ஈசியா வீட்டிலேயே எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சிக்கன்- 1kg
- தேங்காய் துண்டு- 1 கைப்பிடி
- கடுகு- 1/2 ஸ்பூன்
- சோம்பு- 1 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய்- 15g
- சின்ன வெங்காயம்- 300g
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்
- பச்சைமிளகாய்- 1
- இஞ்சி- 6 துண்டு
- பூண்டு- 12 பல்
- மஞ்சள் தூள்- 1/2 ஸ்பூன்
- கருவேப்பிலை- 1 கொத்து
- கொத்தமல்லி- சிறிதளவு
- உப்பு- தேவையான அளவு
- நல்லெண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் சுத்தமாக கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து ஊறவைக்கவும்.
பின் ஒரு வாணலில் நல்லெண்ணெய் சேர்த்து அதில் கடுகு சேர்த்து பொரிந்தவுடன் அதில் சோம்பு சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் விதை நீக்கிய காய்ந்த மிளகாயை சேர்த்து மிதமான தீயில் வைத்து வதக்கவும். தொடர்ந்து அதில் சின்னவெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் எடுத்துவைத்துள்ள இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
சின்னவெங்காயம் பொன்னிறமாக நன்கு வதங்கி வந்ததும் அதில் மஞ்சள் தூள் மற்றும் அரைத்து வைத்திருந்த இஞ்சி பூண்டை சேர்த்து வதக்கவும்.
அடுத்து ஊறவைத்திருந்த சிக்கனை சேர்த்து 10 நிமிடம் வதக்கவும். பின் தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி சேர்த்து 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கிளறி மூடி போட்டு சிக்கனை வேகவைக்கவும்.
சிக்கன் வெந்தவுடன் அதில் எண்ணெயில் வறுத்து தேங்காய் துண்டுகளை சேர்த்து கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான பள்ளிபாளையம் சிக்கன் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |