நாவூறும் சுவையில் பள்ளிபாளையம் சிக்கன்.., எப்படி செய்வது?
இந்த பள்ளிபாளையம் சிக்கன் தோசை, இட்லி, சப்பாத்தி , பூரி, சாப்பாடு என அனைத்திற்கும் அட்டகாசமாக இருக்கும்.
அந்தவகையில், நாவூறும் சுவையில் பள்ளிபாளையம் சிக்கன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- எண்ணெய்- 3 ஸ்பூன்
- கடுகு- 1 ஸ்பூன்
- சின்ன வெங்காயம்- 20
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 2 ஸ்பூன்
- தக்காளி- 2
- பச்சைமிளகாய்- 3
- கறிவேப்பிலை- 2 கொத்து
- காய்ந்த மிளகாய்- 4
- சிக்கன்- 1 kg
- மஞ்சள் தூள்- 1 சிட்டிகை
- மிளகு தூள்- 1 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- தேங்காய் துண்டு- சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு சேர்த்து தாளித்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின் இதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், நறுக்கிய பச்சைமிளகாய், நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

அடுத்து நறுக்கிய காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி அதில் கழுவி சுத்தம் வைத்த சிக்கன் சேர்த்து நன்கு வதக்கவும்.
இதற்கடுத்து இதில் மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து சிக்கனை நன்கு வதக்கவும்.
இறுதியாக இதில் நறுக்கிய தேங்காய் துண்டுகள் சேர்த்து வதக்கி மூடி சிக்கனை வேகவைத்து எடுத்தால் சுவையான பள்ளிபாளையம் சிக்கன் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |