12 மாதத்தில் கசந்த திருமணம்! 5வது கணவரையும் பிரிந்த கனேடிய பெண்... வெளியான பின்னணி
கனடாவில் பிறந்த புகழ்பெற்ற நடிகையும், கோடீஸ்வரியுமான பமீலா ஆண்டர்சன் தனது ஐந்தாவது கணவரையும் பிரிந்துள்ளார்.
கனடிய - அமெரிக்க நடிகையான பமீலாவின் சொத்து மதிப்பு $12 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது.
பமீலாவின் முதல் திருமணம் இசைக் கலைஞர் டாமி லீயுடன் நடந்தது. இவர்களுக்கு ப்ராண்டன் மற்றும் டைலன் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
டாமி லீயைச் சந்தித்த 4 நாட்களில் பமீலா திருமணம் செய்துகொண்டது அப்போது மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது.
இதன்பின்னர் டாமியை விவாகரத்து செய்த பமிலாவுக்கு அதற்கு பிறகு நான்கு திருமணங்கள் ஆனது. அதன்படி கடந்த 2020 இறுதியில் மெய்க்காப்பாளர் டான் ஹாய்ஹஸ்ட் என்பவரை பமீலா ஐந்தாவதாக மணந்தார்.
இந்த நிலையில் திருமணமான 12 மாதத்தில் ஐந்தாவது கணவரையும் பமீலா தற்போது பிரிந்துள்ளார். அவரிடம் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளார் பமீலா.
கணவர் டான், பமீலாவுக்கு ஆதரவாக செயல்படாததே அவர்களின் பிரிவுக்கு காரணம் என கூறப்படுகிறது.