Easy Breakfast: குழந்தைகளுக்கு பிடித்த ஆரோக்கியான பான் கேக்.., 10 நிமிடத்தில் செய்யலாம்
இந்த காலகட்டத்தில் குழந்தைகளுக்கு பெரும்பாலும் துரித உணவுகள் போன்றவற்றின் மீது ஈர்ப்பு அதிகரித்துவிட்டன.
அந்தவகையில், குழந்தைகளுக்கு இந்த ஆரோக்கியம் நிறைந்த பான்கேக் செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள்.
குழந்தைகள் விருப்பி உண்ணும் சத்தான பான்கேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வாழைப்பழம்- 1
- சர்க்கரை- 2 ஸ்பூன்
- எண்ணெய்- 2 ஸ்பூன்
- வெண்ணிலை சாறு(Vanilla extract)- 2 ஸ்பூன்
- கோதுமை மா- 1 கப்
- பேக்கிங் பவுடர்- 1 ஸ்பூன்
- பேக்கிங் சோடா- ¼ ஸ்பூன்
- உப்பு- 1 சிட்டிகை
- பால்- ¾ கப்
- வெண்ணெய்- தேவையான அளவு
- தேன்- 3 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் வாழைப்பழம் சேர்த்து நன்கு மசித்துக்கொள்ளவும்.
பின் இதில் சர்க்கரை, எண்ணெய் மற்றும் வெண்ணிலா சாறு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
அடுத்து ஒரு வடிகட்டியில் கோதுமை மா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு, சேர்த்து சலித்து இதில் போட்டு நன்கு கலந்துகொள்ளவும்.
இதனைத்தொடர்ந்து இதில் பால் சேர்த்து கலந்துகொள்ளவும்.
பின்னர் தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் வெண்ணெய் சேர்த்து தோசை போல் மாவை ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.
பின் இதனை தட்டில் அடுக்கி தேன் ஊற்றினால் சுவையான பான் கேக் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |