PAN அட்டை மோசடியிலிருந்து தப்பிப்பது எப்படி?
PAN அட்டை தொடர்பிலான மோசடிகளில் இருந்து தப்பிப்பது எப்படி என்பது குறித்து இங்கு காண்போம்.
சந்தேகத்திற்குரிய Website
இந்தியாவில் டிஜிட்டல் மோசடி என்பது சாதாரண விடயமாக மாறி வருகிறது. ஒன்லைன் மோசடியில் சிக்கும் பலர் பணத்தையும், நிம்மதியையும் இழக்கின்றனர்.
இதனால் டிஜிட்டல் பரிவர்த்தனை உள்ளிட்ட விடயங்களில் விழிப்புணர்வு தேவை என்பது கட்டாயமாகியுள்ளது.
PAN அட்டை குறித்து பார்க்கும்போது சந்தேகத்திற்குரிய Websiteயில் அதன் எண்ணை பதிவிடக் கூடாது.
உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை சந்தேகத்திற்குரிய Websiteகளில் ஒருபோதும் Enter செய்ய வேண்டாம்.
குறிப்பாக வங்கி விவரங்கள், Login ID மற்றும் Password போன்றவற்றை Enter செய்யாதீர்கள். ஏனெனில் மோசடிக்காரர்கள் உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை தவறாக பயன்படுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
அதேபோல் உங்கள் PAN அட்டையை வழங்க கேட்கும் Website "http" என்று இல்லாமல், "https" என இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் இவ்வாறு இருக்கும் Website பாதுகாப்பானது அல்ல. இது போலியான Website.
Credit Scoreஐ அவ்வப்போது கண்காணிப்பது அவசியம். அத்துடன் ஏதேனும் புதிய கடன் Accounts திறக்கப்பட்டுள்ளதா என்பதை கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
அது மட்டுமல்லாமல் Form 26AS மூலமாக உங்களுடைய PAN அட்டை உடன் இணைக்கப்பட்டுள்ள Transactions அனைத்தையும் நீங்கள் சரிபார்க்கலாம்.
மோசடி புகார்
- ஒருவேளை நீங்கள் ஏதேனும் மோசடியில் மாட்டிக் கொண்டால், அது குறித்து புகார் அளிப்பது எப்படி என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
- முதலில் வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ Tax Information Network Portalக்கு செல்லுங்கள். அங்கு Customer care பிரிவில் உள்ள Complaints அல்லது Queries என்ற Optionஐ தெரிவு செய்யவும்.
- Screenயில் தெரியக்கூடிய வழிமுறைகளை பின்பற்றி புகார் படிவத்தை சரியாக நிரப்புங்கள். இதன்மூலம் நீங்கள் உங்களுடைய புகாரை எளிதாக பதிவு செய்யலாம்.
- புகாரை பதிவு செய்வதற்கு நீங்கள் நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒன்லைனிலேயே எளிதாக செய்து முடிக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |