தித்திக்கும் சுவையில் முருகனுக்கு பிடித்த பஞ்சாமிர்தம்.., வீட்டிலேயே எப்படி செய்வது?
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
தைப்பூசத்தன்று முருகனை வழிபடும் போது சர்க்கரை பொங்கல், பாயாசம் மற்றும் பஞ்சாமிர்தம் நெய் வேத்தியம் படைக்கின்றனர்.
அந்தவகையில், வீட்டிலேயே தித்திக்கும் சுவையில் பஞ்சாமிர்தம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பூவன் வாழைப்பழம்- 2
- நாட்டு சர்க்கரை- 1 கப்
- நெய்- 2 ஸ்பூன்
- தேன்- 3 ஸ்பூன்
- ஏலக்காய் தூள்- ¼ ஸ்பூன்
- கற்கண்டு- 3 ஸ்பூன்
- பேரிச்சம்பழம்- அரை கப்
செய்முறை
முதலில் பூவன் வாழைப்பத்தை பொடிதாக வெட்டி கைகளால் நன்கு மசித்துவிடவும்.
பின் இதனுடன் நாட்டு சர்க்கரை, நெய், தேன் சேர்த்து நன்கு கலந்துவிடுங்கள்.
அடுத்து இதில் கற்கண்டு மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்துகொள்ளவும்.
இதனைத்தொடர்ந்து இதில் பேரிச்சம்பழம் எடுத்து அனைத்தையும் நன்கு கைகளால் பிசைந்தால் சுவையான பஞ்சாமிர்தம் தயார்.
இந்த பஞ்சாமிர்தத்தை 20 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |