கொரோனா பிடியிலிருந்து உலகிற்கு எப்போது தான் விடிவுக்காலம் பிறக்கும்? உண்மையை போட்டுடைத்த பிரெஞ்சு கோடீஸ்வரர்
கொரோனா பிடியிலிருந்து உலகிற்கு எப்போது தான் விடிவுக்காலம் பிறக்கும் என்பதை பிரெஞ்சு கோடீஸ்வர தொழிலதிபரும், அமெரிக்க பயோடெக்னாலஜி நிறுவனமான மாடர்னாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் 9 சதவீத உரிமையாளருமான Stéphane Bancel வெளிப்படுத்தியுள்ளார்.
சுவிஸ் செய்தித்தாள் Neue Zuercher Zeitung-க்கு பேட்டியளித்த Stéphane Bancel , கடந்த ஆறு மாதங்களில் தடுப்பூசி உற்பத்தி திறன் விரிவாக்கத்தை பார்க்கும் போது, அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் போதுமான அளவு டோஸ் கிடைக்கும், இதனால் பூமியில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட முடியும்.
விரைவில் குழந்தைகளுக்கான தடுப்பூசியும் கிடைக்கும். தடுப்பூசி போடாதவர்களுக்கு இயற்கையாகவே எதிர்ப்பு சக்தி உருவாகும்.
ஏனெனில் டெல்டா மாறுபாடு மிகவும் தொற்றக்கூடியது. இது பருவ கால காய்ச்சல் போன்ற நிலைமைக்கு வழிவகுக்கிறது.
நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால் நல்ல குளிர்காலத்தை அனுபவிக்கலாம். தடுப்பூசி போடவில்லை என்றால் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க நேரிடும்.
© Gretchen Ertl/FT
இன்றைய நிலவரப்படி, ஒரு வருடத்தில் உலகம் இயல்பு நிலைக்கு திரும்பும் என நான் நினைக்கிறேன் என Stéphane Bancel கூறியுள்ளார்.