சண்டை இழுத்த ஹர்திக் பாண்டியா..! சிக்சர்களால் பதிலடி கொடுத்த சஞ்சு சாம்சன்
குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை போட்டியின் நடுவே ஸ்லெட்ஜிங் செய்த நிலையில், அதற்கு தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் சஞ்சு சாம்சன் பதிலடி கொடுத்துள்ளார்.
ராஜஸ்தான் அபார வெற்றி
ஐபிஎல்-லில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான 23வது லீக் போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
ஸ்லெட்ஜிங் செய்த பாண்டியா
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் சொற்ப ஓட்டங்களில் வெளியேறியதை தொடர்ந்து, அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பொறுப்பான மற்றும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டு வந்தார்.
அப்போது போட்டியின் நடுவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக களத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டு இருந்த சஞ்சு சாம்சனை நோக்கி வந்த குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, அவரை ஸ்லெட்ஜிங் (சண்டை இழுத்து) செய்து ஆட்டத்தை மாற்ற முயற்சித்தார்.
A sanju samson revenge ? never mess with my skipper !!#SanjuSamson #GTvsRR #RRvsGT #Leo pic.twitter.com/cADWmwnQNK
— Venbaa (@Venba_) April 16, 2023
ஆனால் அமைதியாக எதுவும் பேசாமல் அங்கிருந்து விலகிய சஞ்சு சாம்சன் தனது அதிரடியான ஆட்டத்தால் பதிலடி கொடுத்தார்.
குஜராத் அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான், வீசிய 13வது ஓவரில் சஞ்சு சாம்சன் 3 சிக்சர்கள் தொடர்ந்து அடித்து மிரட்டினார்.
மேலும் மொத்தமாக சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 6 சிக்சருடன் அதிரடியாக 60 ஓட்டங்கள் சேர்த்தார்.
கேப்டன் சஞ்சு சாம்சனின் இந்த பொறுப்பான அதிரடி ஆட்டம் அணியை தோல்வியில் இருந்து மீட்டு வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.
Sanju Samson said, "I think I've enough omelets with two eggs (two ducks), time to scre some runs today (smiles)". pic.twitter.com/mhn74Mo6LY
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 16, 2023
ரசிகர்கள் கண்டனம்
போட்டிக்கு பிறகு பேட்டியளித்த ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், கடந்து இரண்டு போட்டிகளில் டக்-அவுட்டானதை குறிப்பிட்டு,” நான் ஏற்கனவே போதுமான அளவு இரண்டு மூட்டை ஆம்பிலேட்டை பெற்று விட்டேன், எனவே இன்றைய ஆட்டம் ஓட்டங்கள் சேர்ப்பதற்கான நேரம் என்று தெரிவித்தார்.
இதற்கிடையில் போட்டியின் வெற்றிக்காக களத்தில் சஞ்சு சாம்சனை ஹர்திக் பாண்டியா ஸ்லெட்ஜிங் செய்தது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அத்துடன் ஹர்திக் பாண்டியாவின் செயலுக்கு கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.