கங்குலி பேச்சை கேட்க மறுத்த ஹர்திக் பாண்ட்யா- அப்ப இனிமேல் இடம் கிடைப்பது கஷ்டம் தானா?
உடற்தகுதி விஷயத்தில் இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்ட்யா செய்துள்ள செயல் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இந்திய அணியின் சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான ஹர்திக் பாண்ட்யா கடந்த 2 ஆண்டுகளாகவே பார்ம் இன்றி தவிப்பதோடு மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாமல் முயற்சித்து வருகிறார்.
கடந்த ஆண்டு டி20 உலக கோப்பை போட்டியில் இடம்பிடித்திருந்த ஹர்திக் பாண்டியா அந்த தொடரில் 4 ஓவர்கள் வரை மட்டுமே மொத்தமாக வீசினார். இது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை கொடுக்க சமீபத்தில் நடந்த தென்னாப்பிரிக்கா தொடரில் பாண்ட்யா சேர்க்கப்படவில்லை.
இதனிடையே தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வில் உள்ள ஹர்திக் பாண்டியா, தன்னுடைய முழு ஃபிட்னெஸை அடைவதற்காக தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார்.
இதன் செய்தியாளகள் சந்திப்பில் பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய வேண்டி, தற்போது ஹர்திக் பாண்டியாவிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அப்போது தான், அவரால் இந்திய கிரிக்கெட் அணிக்காக நீண்ட காலம் ஆட முடியும். அதே போல, ரஞ்சி தொடரில், அவர் பங்கேற்று அதிக ஓவர்கள் பந்து வீசினால் தான், அவரது உடல் அதிகம் வலிமை அடைந்து, இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க ஒரு வாய்ப்பாக இருக்கும் என அறிவுறுத்தியிருந்தார்.
ஆனால் கங்குலியின் பேச்சை பொருட்படுத்தாத ஹர்திக் பாண்டியா நடைபெறவிருக்கும் ரஞ்சி தொடரில், பரோடா அணிக்காக களமிறங்கவில்லை. மேலும் ரஞ்சி தொடரின் முதல் பாதி, பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் மார்ச் 15 ஆம் தேதி வரையிலும், இரண்டாம் பாதி, மே 30 முதல் ஜூன் 26 வரையும் நடைபெறவுள்ளது.