தம்பியிடமிருந்து தொப்பியை பெற்று மறைந்த தந்தைக்கு அஞ்சலி செலுத்த பாண்டியா செய்த செயல்! கலங்க வைக்கும் காட்சி
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 4 டெஸ்ட் தொடரை 3-1 எனவும், 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 3-2 என இந்தியாவிடம் இழந்தது.
இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று மார்ச் 23 திகதி புனேயில் தொடங்கியது.
இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது. இந்திய அணியின் பிளேயிங் லெவன் விவரம்: ரோகித் சர்மா, ஷிகர் தவான், கோஹ்லி (கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, குருணல் பாண்டியா, ஷார்துல் தாக்கூர், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், பிரசீத் கிருஷ்ணா.
குருணல் பாண்டியா, பிரசீத் கிருஷ்ணா ஆகியோர் இந்தியாவுக்காக தங்களது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் களமிறங்குகின்றனர்.
போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, முதல் போட்டியில் களமிறங்கும் அண்ணன் குருணல் பாண்டியாவுக்கு தம்பி ஹர்திக் பாண்டியா தனது கையால் தொப்பியை வழங்கினார்.
தொப்பியை பெற்றுக்கொண்ட குருணல், மறைந்த தனது தந்தைக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அதை வானத்தை நோக்கி உயர்த்தி காட்டினார்.
ODI debut for @krunalpandya24 ?
— BCCI (@BCCI) March 23, 2021
International debut for @prasidh43 ?#TeamIndia @Paytm #INDvENG pic.twitter.com/Hm9abtwW0g
பின் ஹர்திக் பாண்டியா மீது சாய்ந்த குருணல் கண்கலங்கினார். ஹர்திக்-குருணல் சகோதர்களின் தந்தை கடந்த மாதம் காலமானார் என்பது நினைவுக் கூரத்தக்கது.