யப்பா சாமி... போதும்டா! ஸ்டோக்ஸ் அவுட் ஆனவுடன் கையெடுத்து கும்பிட்டு வழியனுப்பிய பாண்ட்யாவின் வீடியோ காட்சி
இங்கிலாந்து அணிக்கெதிரான கடைசி ஒருநாள் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் அவுட் ஆனவுடன் கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன ஹார்திக் பாண்ட்யாவின் வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று புனேவில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
குறிப்பாக இப்போட்டியில் புவனேஷ்வர் குமார் வீசிய 6-வது ஓவரின் போது ஸ்டோக்ஸ் ஒரு பந்தை தூக்கி அடித்தார், அது அப்படியே அழகான கேட்ச்சாக மிக இலகுவாக ஹர்திக் பாண்டியாவின் கையை நோக்கி சென்றது.
ஆனால் இந்த கேட்ச்சை ஹர்திக் பாண்டியா பிடிக்காமல் கோட்டைவிட்டார்.
— Aditya Das (@lodulalit001) March 28, 2021
மிக முக்கியமான விக்கெட்டான பென் ஸ்டோக்ஸ் கொடுத்த வாய்ப்பை இந்திய அணி தவறவிட்டுவிட்டதால் இதுவே போட்டியின் திருப்புமுனையாக அமையும் என கருதப்பட்டது.
இதனால் ஹர்திக் பாண்டியாவும் மிகுந்த விரக்தியடைந்தார். ஒருவேளை பென் ஸ்டோக்ஸ் நிலைத்து நின்று அதிரடியாக ஆடிவிட்டால், ஹார்திக் விட்ட கேட்ச் தான் காரணம் என்று ஒரு விவாதமே சென்றிருக்கும்.
ஆனால், அந்தளவிற்கு நடராஜன் விடவில்லை. பென் ஸ்டோக்ஸை தன்னுடைய அற்புதமான பந்து வீச்சின் மூலம் அவுட் ஆக்கினார்.
நடராஜன் வீசிய புல் டாஸ் பந்தை லெக் திசையில் ஸ்டோக்ஸ் அடித்து ஆட, அங்கு பீல்டிங் நின்று கொண்டிருந்த தவான் பிடித்தார்.
இதனால் நிம்மதி பெருமூச்சு விட்ட ஹர்திக் பாண்டியா, கேட்ச் பிடித்த தவானுக்கு சல்யூட் செய்யும் விதமாக தரை வரை குணிந்து தனது சந்தோசத்தை வெளிப்படுத்தினார்.