நாவூறும் சுவையில் பன்னீர் 65.., எப்படி செய்வது?
சாம்பார் சாதம், ரசம் சாதம், கலவை சாதம் என அனைத்திற்கும் இந்த சுவையான பன்னீர் 65 சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.
இதனை வீட்டில் உள்ள குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி உண்ணுவார்க்ள.
அந்தவகையில், நாவூறும் சுவையில் பன்னீர் 65 எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மைதா மாவு- 3 ஸ்பூன்
- சோள மாவு- 2 ஸ்பூன்
- காஸ்மீரி மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
- மிளகாய் தூள்- ½ ஸ்பூன்
- மிளகு தூள்- ½ ஸ்பூன்
- கரம் மசாலா- ½ ஸ்பூன்
- சீரக தூள்- ¼ ஸ்பூன்
- மஞ்சள் தூள்- ¼ ஸ்பூன்
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்
- தயிர்- 1 ஸ்பூன்
- எலுமிச்சை- ½
- உப்பு- தேவையான அளவு
- பன்னீர்- 200gm
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சோள மாவு, காஸ்மீரி மிளகாய் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், கரம் மசாலா, சீரக தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கலந்துகொள்ளவும்.
பின் இதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்துவைத்துக்கொள்ளவும்.

அடுத்து பன்னீரை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி இந்த மாவில் போட்டு கலந்து 30 நிமிடம் மூடி போடு வைத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து அடுப்பில் ஒரு வாணல் வைத்து எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து சூடுபடுத்தவும்.
இறுதியாக பன்னீரை எண்ணெய்யில் போட்டு பொறித்து எடுத்தால் சுவையான பன்னீர் 65 தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |