குழந்தைகள் விரும்பி உண்ணும் பன்னீர் கட்லெட்.., எப்படி செய்வது?
வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கட்லெட்டை விரும்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில், நாவூறும் சுவையில் குழந்தைகள் விரும்பி உண்ணும் பன்னீர் கட்லெட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மைதா- 5 ஸ்பூன்
- மிளகு- ஒரு ஸ்பூன்
- பன்னீர்- 500g
- எண்ணெய்- தேவையான அளவு
- உப்பு- தேவையான அளவு
- மிளகாய் தூள்- ½ ஸ்பூன்
- உருளைக்கிழங்கு- 6
- பிரட் தூள்- 1 கப்
செய்முறை
முதலில், அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடானது மைதாவை ஒரு நிமிடங்களுக்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் இதனுடன் துருவிய பன்னீர், வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, மிளகு தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.

இதையடுத்து இதனை சிறிய சிறிய உருண்டையாக பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இதற்கடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருண்டையாக பிடித்து வைத்துள்ள மாவை வடைப்போன்று தட்டிக் கொள்ளவும்.
இறுதியாக பிரட் துகளில் பிரட்டி எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்தால் போதும் சுவையான பன்னீர் கட்லெட் ரெடி.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |