பன்னீர் இருந்தால் போதும்... அட்டகாசமான சுவையில் பன்னீர் யாக்னி செய்யலாம்
பொதுவாகவே அனைவருக்கும் ஏதாவது சாப்பிடனும் போலவே இருக்கும்.
அந்த நேரத்தில் உடனே செய்யக்கூடிய ஒரு சில உணவு வகைகளை செய்து சாப்பிடுவார்கள். அந்தவகையில் பன்னீர் வைத்து எப்படி பன்னீர் யாக்னி செய்யலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மசாலா தூள் செய்ய
- காஷ்மீரி மிளகாய் - 5
- மிளகு - 1 தேக்கரண்டி
- சோம்பு - 1 தேக்கரண்டி
- சீரகம் - 1 தேக்கரண்டி
- கிராம்பு - 5
- பட்டை
- ஏலக்காய் - 2
- தனியா - 1 1/2 மேசைக்கரண்டி
விழுது அரைக்க
- தயிர் - 1 கப்
- பன்னீர் துண்டுகள் - 5
- முந்திரி பருப்பு - 25 ஊறவைத்து
- பன்னீர் & காய்கறி வறுக்க
- நெய் - 2 தேக்கரண்டி
- பன்னீர் - 400 கிராம்
- வெங்காயம் - 1 நறுக்கியது
- பச்சை மிளகாய் - 1 நறுக்கியது
- சிவப்பு குடைமிளகாய் - 1 நறுக்கியது
பன்னீர் யாக்னி செய்ய
- எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
- நெய் - 2 மேசைக்கரண்டி
- பிரியாணி இலை
- ஷாஹி ஜீரா - 1/2 தேக்கரண்டி
- இஞ்சி பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
- அரைத்த மசாலா தூள்
- உப்பு - 1 தேக்கரண்டி
- தண்ணீர் - 1 கப்
- அரைத்த விழுது
- வறுத்த பன்னீர் மற்றும் காய்கறிகள்
- கசூரி மேத்தி
செய்முறை
1. மசாலா தூள் செய்ய காஷ்மீரி சிவப்பு மிளகாய், மிளகு, சோம்பு, சீரகம், கிராம்பு, பட்டை, ஏலக்காய், தனியா எடுத்துக் கொள்ளவும்.
2. ஒரு கடாயில், இவை அனைத்தையும் சேர்த்து ஒரு நிமிடம் வறுத்து ஒரு தட்டில் மாற்றவும்.
3.ஆறியதும் மிக்சி ஜாடிக்கு மாற்றி பொடியாக அரைக்கவும்.
4. ஒரு மிக்ஸி ஜாரில் தயிர், பன்னீர், 25 ஊறவைத்த முந்திரி சேர்த்து நைசாக அரைக்கவும்.
5. ஒரு கடாயில் நெய் சேர்த்து, பன்னீர் துண்டுகள் சேர்த்து பொன்னிறமாக வறுத்து, கடாயில் இருந்து இறக்கி, தனியே வைக்கவும்.
6. அதே கடாயில் வெங்காயம், பச்சை குடைமிளகாய், சிவப்பு குடைமிளகாய் சேர்த்து இரண்டு நிமிடம் வறுத்து தனியாக வைக்கவும்.
7. ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து, பிரியாணி இலை, ஷாஹி ஜீரா, அரைத்த விழுது சேர்த்து 2-3 நிமிடங்கள் குறைந்த தீயில் சமைக்கவும்.
8. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கலக்கவும். புதிதாக அரைத்த மசாலா தூள், உப்பு சேர்த்து அனைத்தையும் கலக்கவும்.
9. தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
10. 5 நிமிடங்களுக்குப் பிறகு வறுத்த பன்னீர் மற்றும் வறுத்த காய்கறிகளைச் சேர்க்கவும்.
11. கடாயை மூடி, தீயை குறைந்தபட்சமாக குறைத்து ஐந்து நிமிடங்கள் சமைக்கவும்.
12. கசூரி மேத்தி இலைகளை சேர்த்து கலக்கவும்.
13. சுவையான பன்னீர் யாக்னி ரொட்டி அல்லது சப்பாத்தியுடன் சூடாக பரிமாற தயாராக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |