ரொனால்டோவை போன்றவர் கோலி! ஆனால் பணத்திற்காக - இங்கிலாந்து முன்னாள் வீரர் குற்றச்சாட்டு
ரொனால்டோவை போல் புகழ்பெற்ற கோலியை வைத்து பணம் ஈட்டவே அவரை பிசிசிஐ அணியில் தக்கவைக்கிறது என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மாண்டி பனேசர் குற்றம்சாட்டியுள்ளார்.
விராட் கோலியின் துடுப்பாட்டம் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. எனினும், அவரது ரசிகர்கள் அவருக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர்.
இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கோலி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 17ஆம் திகதி நடக்கும் கடைசி போட்டியிலும் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், கோலியை பணத்திற்காக பிசிசிஐ பயன்படுத்துவதாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மான்டி பனேசர் குற்றம்சாட்டியுள்ளார்.
zeenews.india
அவர் கூறுகையில், 'பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவை போன்று தான் விராட் கோலியும். அவர் எப்போதெல்லாம் மான்செஸ்டர் அணிக்காக ஆடுகிறாரோ, அப்போதெல்லாம் அனைவரும் கால்பந்தை போட்டியை பார்ப்பார்கள்.
அதேபோல் கோலிக்கும் அதிகப்படியான ரசிகர்கள் உள்ளதால், போட்டியின் முடிவு எப்படி வந்தாலும் சரி கோலி விளையாடினால் தான் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைவார்கள். அதனால் தான் பிசிசிஐ அழுத்தத்தில் உள்ளது.
File
கோலியை நீக்கினால் மிகப்பெரிய வருமான இழப்பை பிசிசிஐ சந்திக்கும். எனவே தான் வேறு வழியின்றி அவரை அணியில் சேர்க்கிறார்கள்' என தெரிவித்துள்ளார்.
PC: AFP