வரப்போகும் பங்குனி உத்திரம்.., இந்த விடயங்களை மறக்காமல் செய்யுங்கள்
பங்குனி உத்திரம் என்பது பங்குனி மாத பௌர்ணமியுடன் உத்திரம் நட்சத்திரம் இணையும் நாளில் கொண்டாடப்படும் மிக முக்கிய இந்து சமய திருவிழாவாகும்.
அந்தவகையில், இந்த ஆண்டிற்கான பங்குனி உத்திரம் மார்ச் 31ஆம் திகதி காலை 4 மணி 50 நிமிடத்திற்கு தொடங்கி, ஏப்ரல் 01ஆம் திகதி காலை 5 மணி 47 நிமிடத்திற்கு முடிவடைகிறது.
இந்நாளில் முருகன்-தெய்வானை திருக்கல்யாணம், வள்ளி-முருகன் திருமணம் மற்றும் சிவ-பார்வதி திருமணம் நடைபெறுவதால், இது திருமணத் தடையை நீக்கும் மங்களகரமான நாளாகக் கருதப்படுகிறது.
அறுபடை வீடுகள் மற்றும் அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள், காவடி ஆட்டம், தேரோட்டம் நடைபெறும்.
பங்குனி உத்திர நாளில் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி, கந்த சஷ்டி கவசம், வேல்மாறல் படித்து முருகனை வழிபட வேண்டும்.
மேலும், பங்குனி உத்திர விரதம் இருப்பவர்கள், அன்று முழுவதும் சாப்பிடாமல் பால்/பழம் அருந்தி விரதம் இருந்து, மாலையில் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்வார்கள்.
அந்தவகையில், பங்குனி உத்திர நாள் குறித்து முக்கியமான விடயங்களை ஜெயம் S.K கோபி பகிர்ந்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |