வறுத்த சிவப்பு எறும்பை வைத்து பானிபூரி தயாரிப்பு.., வைரலாகும் வீடியோ
பானிபூரியில் சுவையை கூடுதலாக்க வறுத்த எறும்புகளை சேர்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ
தாய்லாந்தை சேர்ந்த சமையல் கலைஞர்கள் பானிபூரியில் சுவையை கூடுதலாக்க வறுத்த எறும்புகளை சேர்த்துள்ளனர்.
இவர்கள், இந்தியாவின் பானிபூரியை தங்களுடைய பாரம்பரியம் மாறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த விடயத்தை செய்துள்ளனர். அதற்காக, பானிபூரி தயாரிப்பில் தக்காளி, புளித்த பீன்ஸ், தேங்காய்ப்பால் மற்றும் மல்லி இலை ஆகியவற்றை சேர்க்கின்றன.
அதோடு, கொட்டக்கூடிய சிவப்பு எறும்புகளை வறுத்து சுவைக்காக பூரியின் மேலாக அலங்கரித்து சாப்பிட கொடுக்கிறார்கள்.
இந்த எறும்பு பானிபூரியானது பாங்காக்கில் உள்ள பிரபல உணவு விடுதியில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து இந்த சிவப்பு எறும்புகளை வரவழைத்தனர்.
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதால் இந்தியாவில் உள்ள பானிபூரி ரசிகர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால், தாய்லாந்தில் உள்ள உணவு பிரியர்களிடம் இருந்து வரவேற்பு கிடைத்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில், பழங்குடியினரின் உணவுப் பழக்கவழக்கத்தில் சிவப்பு எறும்புகளை அதிகமாக பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |