நூலிழையில் தப்பிய தினேஷ் கார்த்திக்! விக்கெட்டை காப்பாற்ற பேட்டை வீசிய ரிஷப்: வைரலாகும் வீடியோ
டெல்லி-கொல்கத்தா போட்டியின் போது தினேஷ் கார்த்திக் பந்தை பிடிக்க வருவது தெரியாமல் ரிஷப் பந்த் பேட்டை வீசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஷார்ஜாவில் நடக்கும் 2021 ஐபிஎல் தொடரின் 41 போட்டியில் டெல்லி-கொல்கத்தா அணிகள் விளையாடி வருகின்றன.
டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
போட்டியின் 16வது ஓவரை கொல்கத்தா வீரர் வருண் சக்ரவர்த்தி வீசி ரிஷப் பந்த் பேட்டிங் செய்தார்.
முதல் பந்தை ரிஷப் பந்த் விளாச முயன்றார், ஆனால் பந்த தரையில் பட்டு மேலே சென்றது.
உடனே பந்து ஸ்டம்பில் பட்டு விடும் என கருதிய பந்த், விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் பந்தை பிடிக்க வருவது தெரியாமல், பந்தை தடுக்க பேட்டை வீசினார்.
Scenes from Sharjah✨
— Naman Desarda (@DesardaNaman) September 28, 2021
Rishabh Pant caught hitting Dinesh Karthik ?
(Just Kidding)@DineshKarthik @RishabhPant17 @IPL #IPL2O21 #DCvKKR pic.twitter.com/vunHMQGJlW
அதிர்ஷ்டவசமாக நூலிழையில் தப்பிய தினேஷ் கார்த்திக் மைதானத்தில் விழ, உடனே அருகே சென்ற பந்த் மன்னிப்பு கோரினார்.
20 ஓவர் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்துள்ளது. 128 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கி விளையாட உள்ளது.