தோனியின் சாதனையை நொறுக்கிய பண்ட்! அந்த 45 நிமிட உரையாடலுக்கு பலன் கிடைத்ததாக முன்னாள் வீரர் பெருமிதம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தோனியின் சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சதம் விளாசி மிரட்டினார். 113 பந்துகளில் 125 விளாசிய பண்ட், ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்.
பண்ட் சதம் விளாசியதன் மூலம், இந்தியாவுக்கு வெளியே நடந்த போட்டியில் சேஸிங்கின் போது சதம் விளாசிய இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.
PC: AFP
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தோனி 87 ஓட்டங்கள் எடுத்ததே, இந்திய விக்கெட் கீப்பர் சேஸிங்கின் போது குவித்த அதிகபட்ச ஓட்டங்களாக இருந்தது.
PC: ESPNcricinfo
அதனை சதம் அடித்து பண்ட் முறியடித்துள்ளார். மேலும், ரிஷப் பண்ட்டை பாராட்டி முன்னாள் வீரர் யுவராஜ் சிங் ட்வீட் செய்துள்ளார்.
Looks like the 45 minute conversation made sense ?!! Well played @RishabhPant17 that’s how you pace your ininings @hardikpandya7 great to watch ? #indiavseng
— Yuvraj Singh (@YUVSTRONG12) July 17, 2022
அதில், 'உங்களுடனான 45 நிமிட உரையாடல் அர்த்தமுள்ளதாக மாறியதாக தெரிகிறது. சிறப்பாக விளையாடினீர்கள் ரிஷப் பண்ட். உங்கள் இன்னிங்சில் வேகத்தை எப்படி அதிகப்படுத்துகிறீர்கள் ஹர்திக் பாண்ட்யா, பார்ப்பதற்கு அருமையாக இருந்தது இந்தப் போட்டி' என தெரிவித்துள்ளார்.
கடந்த 2002ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில், யுவராஜ் சிங்-முகமது கைப் ஜோடி 326 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி ஆடியது. இருவரும் 121 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அந்த நாளை நினைவுகூர்ந்து இந்திய அணி 13ஆம் திகதி கொண்டாடியது.
PC: AFP
இந்த நிலையில் அதே போன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடந்துள்ளது. ரிஷப் பண்ட் - ஹர்திக் பாண்ட்யா ஜோடி 133 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளது. இந்த போட்டிக்கு முன்பாக பண்ட்டிடம் 45 நிமிடங்கள் பேசியதை தான் யுவராஜ் சிங் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.