நீங்கள் ஒன்றும் தோனி இல்லை: அவரைப்போல் முயற்சிக்க வேண்டாம் - ரிஷாப் பண்ட்டிற்கு அறிவுரை
எம்.எஸ்.தோனியைப் போல 7வது இடத்தில் களமிறங்குவதை செய்ய வேண்டாம் என ரிஷாப் பண்ட்டிற்கு இந்திய வீரர் புஜாரா அறிவுரை வழங்கியுள்ளார்.
ரிஷாப் பண்ட்
நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தியது.
லக்னோ அணியில் வழக்கமாக 4வது வரிசையில் களமிறங்கும் ரிஷாப் பண்ட், நேற்றையப் போட்டியில் 7வது வரிசையில் களமிறங்கினார்.
இது ரசிகர்கள், விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் என பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
புஜாரா அறிவுரை
இந்த நிலையில், இந்திய வீரர் புஜாரா இதனை குறிப்பிட்டு ரிஷாப் பண்ட்டிற்கு அறிவுரை கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், "ரிஷாப் பண்ட் உண்மையில் என்ன நினைத்து 7வது வரிசையில் களமிறங்கி விளையாடினார் என்று தெரியவில்லை. அவர் மிடில் வரிசையில் களமிறங்கி விளையாட வேண்டும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
அவர் தோனி செய்ததை செய்ய நினைக்கிறார். ஆனால், அவர் அந்த நிலைக்கு அருகில் கூட இல்லை. 6வது மற்றும் 15வது ஓவர்களுக்கு இடையில் மிடில் வரிசையில் துடுப்பாட்டம் செய்யக்கூடிய வீரர்களில் ரிஷாப் பண்ட் ஒருவர் என்று நினைக்கிறேன்.

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன்
அவர் finisher கிடையாது, எனவே ரிஷாப் பண்ட் மிடில் வரிசையில் இறங்கி துடுப்பாட்டம் செய்வதே சரியானது" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |