இம்முறை சீராஜை குறிவைத்த இங்கிலாந்து ரசிகர்கள்: வருத்தமடைந்த கோலி! உண்மையை உடைத்த ரிஷப் பண்ட்
இங்கிலாந்து-இந்தியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் போது பவுண்டரி அருகே பீல்டிங் செய்துக்கொண்டிருந்த சீராஜ் மீது ரசிகர்கள் பந்தை எறிந்ததை ரிஷப் பண்ட் வெளிப்படுத்தியுள்ளார்.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
1-0 என இந்திய முன்னிலையில் உள்ள நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நேற்று ஆகஸ்ட் 25ம் தேதி HEADINGLEY மைதானத்தில் தொடங்கியது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 78 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விகட்கெட் இழப்பின்றி 120 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
இந்நிலையில் முதல் நாள் ஆட்டத்திற்கு பின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட இந்திய வீரர் ரிஷப் பண்ட், முதல் நாள் ஆட்டத்தின் போது பவுண்டரி அருகே பீல்டிங் செய்துக்கொண்டிருந்த சீராஜ் மீது ரசிகர்கள் பந்தை எறிந்ததை வெளிப்படுத்தியுள்ளார்.
சிராஜ் மீது யாரோ பந்தை ஏறிந்தார்கள், அதனால் கோஹ்லி மிகவும் வருத்தப்பட்டார்.
இங்கிலாந்து ரசிகர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் ஆனால் இந்திய பீல்டர்கள் மீது எதையும் வீசக்கூடாது.
இது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல, நான் நினைக்கிறேன் என பண்ட் கூறினார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பவுண்டரி அருகே பீல்டிங் செய்துக்கொண்டிருந்த இந்திய வீரர் கே.எல்.ராகுல் மீது ரசிகர்கள் கார்க்கை வீசியது சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவுக் கூரத்தக்கது.