29 பந்தில் சிக்ஸர் அடித்து அரைசதம்! கடைசி டெஸ்டில் ருத்ரதாண்டவமாடிய ரிஷாப் பண்ட் (வீடியோ)
பார்டர் கவாஸ்கர் கடைசி டெஸ்டில் ரிஷாப் பண்ட் அதிவேக அரைசதம் அடித்தார்.
முதல் பந்திலேயே சிக்ஸர்
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி துடுப்பாட்டம் செய்து வருகிறது.
கே.எல்.ராகுல் 13 ஓட்டங்களிலும், ஜெய்ஸ்வால் 22 ஓட்டங்களிலும் போலண்ட் ஓவரில் கிளீன் போல்டு ஆகினர். அடுத்து வந்த கோஹ்லி 6 ஓட்டங்கள் எடுத்த நிலையில் போலண்ட் ஓவரில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
If #RishabhPant had remained unbeaten the whole day, he would have completed his century, but it is very sad to see him getting out because India's hopes were pinned on him#INDvsAUSTest#AUSvIND #INDvsAUS#RishabhPant#JaspritBumrah#ViratKohli𓃵pic.twitter.com/j6M2BbiVbr
— Rahul Gupta (@RahulGu04197245) January 4, 2025
பின்னர் வந்த கில் 13 ஓட்டங்களில் வெளியேற, களமிறங்கிய ரிஷாப் பண்ட் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து மிரட்டினார்.
29 பந்தில் அரைசதம்
அதன் பின்னர் ருத்ர தாண்டவம் ஆடிய அவர், ஸ்டார்க் ஓவரில் சிக்ஸர் அடித்து 29 பந்தில் அரைசதம் விளாசினார்.
மேலும் சிக்ஸர், பவுண்டரிகள் என தெறிக்கவிட்ட அவர் 33 பந்துகளில் 61 ஓட்டங்கள் விளாசிய நிலையில் கம்மின்ஸ் ஓவரில் அவுட் ஆனார். அவரது ஸ்கோரில் 4 சிக்ஸர், 6 பவுண்டரிகள் அடங்கும்.
Say stupid or anything rishabh Pant is rishabh Pant
— Chandan (@ChandanIND63) January 4, 2025
54 runs in just 29 balls 🔥#RishabhPant #INDvsAUSTest pic.twitter.com/42H4eJpRQp
இந்திய அணிக்காக டெஸ்டில் அதிவேக அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களிலும் பண்ட் (28 மற்றும் 29 பந்துகளில் அரைசதம்) உள்ளார்.
இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 141 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ஜடேஜா, சுந்தர் இருவரும் களத்தில் உள்ளனர்.
Stumps on Day 2 in Sydney.#TeamIndia move to 141/6 in the 2nd innings, lead by 145 runs.
— BCCI (@BCCI) January 4, 2025
Ravindra Jadeja & Washington Sundar at the crease 🤝
Scorecard - https://t.co/NFmndHLfxu #AUSvIND pic.twitter.com/4fUHE16iJq
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |