வெறும் வயிற்றில் பப்பாளி நீர்... உடலில் என்னென்னலாம் நடக்கும் தெரியுமா?
பொதுவாகவே வெறும் வயிற்றில் எதுவும் குடிக்க தோன்றாது. குறிப்பாக கசப்பான எந்தவொரு திரவத்தையும் குடிக்கவே தோன்றாது.
பப்பாளியின் விதைகளை ஊறவைத்து அந்த நீரை குடித்து வந்தால், உடலிற்கு பல ஆரோக்கியம் சார்ந்த நன்மைகள் ஏற்படும். அது பற்றி பார்க்கலாம்.
பப்பாளி விதைகள்
பப்பாளி விதையை தண்ணீரில் ஊறவைத்து பருகுவது என்பது ஒரு முக்கியமான விடயமாகும். இந்த பழமானது சிறந்த சுவையை மட்டும் தருவதில்லை. இதன் விதையும் பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது.
பப்பாளியின் விதைகளை ஊறவைத்து அந்த நீரை குடித்து வரலாம்.
செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
வெறும் வயிற்றில் குடிப்பதால் அதிக நார்ச்சத்து மற்றும் என்சைம் உள்ளடக்கம் காரணமாக செரிமானம் இயற்கையாக நடைபெறும். குடல் இயக்கமும் சீராகும்.
சிறந்த காலை டிடாக்ஸ் பானம்
பப்பேன் போன்ற நொதிகள், உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றும். கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.
எனவே, கல்லீரல் பிரச்சினைகள் உள்ளவர்கள் இந்த நீரை குடிக்கலாம்.
இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
பப்பாளி விதை நீர், வைட்டமின் சி உள்ளிட்ட ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த ஒரு இயற்கை பானமாகும்.
இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதோடு, தொற்று நோய்களை எதிர்த்து போராடுகிறது.
எடை இழப்பை ஊக்குவிக்கிறது
ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலைக் குறைக்கிறது. அதிகமாக சாப்பிடுவதை குறைக்க வைக்கும். இதனால் உடல் எடையும் சீக்கிரமாக குறையும்.
இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்
கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும். இதனால் இதய நோய் அபாயம் குறைகிறது மற்றும் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது.
எப்படி தயாரிப்பது?
பழுத்த பப்பாளியில் இருக்கும் விதையை நன்கு கழுவி, தண்ணீரில் சேர்த்து ஊற வைக்கவும்.
பின் காலையில், தண்ணீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |