13 வயதிலேயே ரூ.100 கோடி சம்பாதிக்கும் சிறுவன்.., என்ன பிசினஸ் செய்கிறார்?
மிகச் சிறிய வயதிலேயே தனக்கென ஒரு சொந்த கம்பெனியை உருவாக்கி ரூ.100 கோடி சம்பாதிக்கும் சிறுவனை பற்றி தான் பார்க்க போகிறோம்.
யார் இந்த சிறுவன்?
13 வயதான திலக் மேத்தா என்ற சிறுவன் தனது மாமா வீட்டிற்கு சென்று விட்டு தனது வீட்டிற்கு வந்தார். அப்போது தனது புத்தகங்களை மாமா வீட்டிலேயே வைத்து விட்டு வந்துள்ளார்.
அப்போது அந்த புத்தகங்களை ஒரே நாளில் டெலிவரி செய்யக்கூடிய ஏஜென்சிகளை தொடர்பு கொண்டு விசாரித்தார். ஆனால், அதற்கான செலவு அதிகமாக இருந்துள்ளது. இல்லையென்றால் அதிக நாள் எடுத்துக் கொண்டுள்ளது.
அப்போது தான் திலக் மேத்தா, ஒரு சாதாரண மனிதன் வேறு வழியில்லாத நிலையில் எப்படி பெறுவார் என்று யோசித்தார்.
ரூ.100 கோடி
இந்நிலையில் தான் Paper n parcels என்ற டெலிவரி சேவை நிறுவனத்தை திலக் மேத்தா உருவாக்கினார். இந்த சேவையின் செலவை அறிந்த இவர், மும்பையின் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு சாப்பாடு கேரியரை குறைந்த செலவில் கொண்டு செல்லும் டப்பாவாலா நிறுவனத்தின் முறையை பின்பற்றினார்.
ஆரம்பத்தில் தந்தையின் நிதியை டப்பாவாலாக்களுடன் கூட்டு சேர்ந்து குறைந்த விலையில் பார்சல்களை அனுப்பும் சேவையை செய்தார். பின்னர், 2018 -ம் ஆண்டில் ஒன்லைன் தளம் ஒன்றை தொடங்கி ஷிப்பிங் மற்றும் லாஜிஸ்டிக்ஸை நிர்வகித்தார்.
இதனைத்தொடர்ந்து, தனது முயற்சியினால் நிறுவனத்தை நல்ல நிலைக்கு கொண்டு வந்தர். அப்போது நிறுவனத்தின் வருவாய் ரூ.100 கோடியை எட்டியது.
இவருடைய நிறுவனம் லாபத்தை எட்டியது மட்டுமல்லாமல் வேலைவாய்ப்பையும் உருவாக்கியது. 2021 -ம் ஆண்டில் திலக் மேத்தாவின் நிகர சொத்து மதிப்பு ரூ.65 கோடி ஆகும். மேலும் மாத வருமானம் ரூ.2 கோடியாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |