அரசுப் பள்ளியில் செய்தித்தாளில் பரிமாறப்பட்ட மதிய உணவு- வெளியான வீடியோ
மத்தியப் பிரதேசத்தின் ஷியோபூர் மாவட்டத்தில் அரசின் நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், அப்பள்ளியில் மாணவர்களுக்கு செய்தித்தாள்களில் உணவுகள் பரிமாறபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதிய உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு சுகாதாரமற்ற முறையில் வழங்கப்பட்ட அந்த உணவுகளை மாணவர்கள் உண்ணுகின்றனர்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் குறித்து ஷியோபூர் மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டதையடுத்து இதற்கு விளக்கம் அளிக்கும்படி பள்ளி முதல்வருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
விசாரணையில் இச்சம்பவம் உறுதியானதை தொடர்ந்து அப்பள்ளியின் சத்துணவு பொறுப்பாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
श्योपुर की तस्वीर है, मिड-डे मील रद्दी अखबार में परोसा जा रहा है
— Anurag Dwary (@Anurag_Dwary) November 6, 2025
मिड-डे मील अब प्रधानमंत्री पोषण शक्ति निर्माण टाइप कुछ हो गया है 2023 बीजेपी ने घोषणापत्र में इसमें पौष्टिक भोजन देने की बात कही थी, पौष्टिक तो दिख रहा है फिलहाल परोसा कैसे जाए ये तय हो जाता @GargiRawat @manishndtv pic.twitter.com/ecrHIeLgu5
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |