கடலுக்கடியில் பயணித்த பாரா ஒலிம்பிக் தீபம்: சில சுவாரஸ்ய தகவல்கள்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் முடிந்துவிட்டாலும், இன்னமும் அங்கு பரபரப்பு குறைந்தபாடில்லை.
காரணம், மீண்டும், நாளை மறுநாள், அதாவது, ஆகத்து மாதம் 28ஆம் திகதி பாரா ஒலிம்பிக் போட்டிகள் பாரீஸில் துவங்க உள்ளன.
கடலுக்கடியில் பயணித்த பாரா ஒலிம்பிக் தீபம்
இந்நிலையில், பாராஒலிம்பிக் தீபம், பிரான்சையும் பிரித்தானியாவையும் இணைக்கும் Channel Tunnel என்னும் கடலுக்கடியில் செல்லும் சுரங்கப்பாதை வழியாக, பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு பயணிப்பதைக் காட்டும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
சில சுவாரஸ்ய தகவல்கள்
ஏன் அந்த தீபம் பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கும் பயணிக்கிறது?
அதாவது, இங்கிலாந்திலுள்ள Stoke Mandeville என்னும் இடத்தில்தான் முதன்முதலில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் துவங்கின.
1948ஆம் ஆண்டு, Stoke Mandevilleஇல் அமைந்துள்ள மருத்துவமனையில், உடற்குறைபாடுகள் கொண்ட போர் வீரர்களுக்காக, ஜேர்மன் நரம்பியல் நிபுணரான Ludwig Guttmann என்னும் மருத்துவர், விளையாட்டுப்போட்டிகளை நடத்தினார்.
அங்குதான் பாரா ஒலிம்பிக் போட்டிகள் பிறந்தன. ஆகவேதான், Stoke Mandevilleஇல் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டுத்திடலிலிருந்து பாரா ஒலிம்பிக் தீபம், பிரான்சையும் பிரித்தானியாவையும் இணைக்கும் Channel Tunnel என்னும் கடலுக்கடியில் செல்லும் சுரங்கப்பாதை வழியாக பிரான்சுக்கு கொண்டு வரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |