இன்று வானில் நிகழப்போகும் அற்புதம்: உலகம் முழுவதும் காணலாம்
பூமியிலிருந்து ஒரே நேரத்தில் அணிவகுத்து நிற்கும் மற்ற கோள்களை பார்ப்பது பிரமிக்கத்தக்க காட்சியாக இருக்கும்.
அந்தவகையில், செவ்வாய், வியாழன், யுரேனஸ், வெள்ளி, நெப்டியூன், புதன் மற்றும் சனி ஆகிய ஏழு கோள்களையும் பிப்ரவரி 28 அதாவது இன்று மாலையில் ஒரே நேரத்தில் பார்க்க முடியும்.
இப்போது இந்த நிகழ்வை நீங்கள் தவறவிட்டால், 15 ஆண்டுகள் கழித்து 2040-ம் ஆண்டில்தான் தோன்றும்.
இப்படி பல கோள்கள் அணிவகுத்து நிற்கும் இந்த நிகழ்வை ''பிளானெட்டரி பரேட்'' என அறிவியல் மொழியில் அழைக்கின்றனர்.
சூரியன் மறைந்த பின்னர், முடிந்தவரை அனைத்து கோள்களையும் பார்ப்பதற்கு சிறந்த நேரமாகும்.
இதில் புதன், வெள்ளி, வியாழன் மற்றும் செவ்வாய் ஆகிய கோள்களை வெறும் கண்களாலேயே பார்க்க முடியும்.
சூரியன் மறையும்போது சனி மற்றும் புதன் கோள்களும் மறையும் சமயம் என்பதால், அவற்றை பார்ப்பது கடினமானது.
யுரேனஸ், நெப்டியூன் ஆகிய இரு கோள்களை மட்டும் தொலைநோக்கியால் பார்க்க முடியும்.
மேலும், ஒளி மாசு குறைவாகவும் அடிவானம் தெளிவாகவும் தெரியும் இடத்துக்கு சென்று பார்த்தால், அதிகமான கோள்களை பார்ப்பதற்கான வாய்ப்புகள் கூடும்.
இந்த அரிய நிகழ்வு பிப். 28 அதாவது இன்று தொடங்கி சில நாட்களுக்கு தெரியும். இதை வீட்டிலிருந்தே பார்க்க முடியும்.
அதன்பின், ஒவ்வொரு கோளும் வெவ்வேறு காலத்தில் அடிவானத்தில் கீழே சென்றுவிடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |