பிரித்தானியாவில் 3 வயது சிறுவனை கடித்து கொன்ற வளர்ப்பு நாய்: பெற்றோருக்கு சிறை தண்டனை
வளர்ப்பு நாய் கடித்து 3 வயது மகன் உயிரிழந்த சம்பவத்தில் பெற்றோருக்கு நீதிமன்றம் சிறை தண்டனையை விதித்துள்ளது.
3 வயது சிறுவன் உயிரிழப்பு
பிரித்தானியாவின் ரோச்டேல் பகுதியில் உள்ள கார் பண்ணையில்(Carr Farm) வீட்டில் 2022ம் ஆண்டு மே மாதம் டேனியல் டவிங் என்ற 3 வயது சிறுவன் பெற்றோரின் வளர்ப்பு நாயால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்தார்.
சிட் என்ற பெயருடைய கேனி கோர்சோ(Cane Corso) இன நாய்க் கூண்டில் சிறுவன் தவறுதலாக இருந்த போது இந்த கொடூர தாக்குதலானது நிகழ்ந்துள்ளது.
தலையில் ஏற்பட்ட பலத்த காயம் மற்றும் கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக அன்று மதியமே 3 வயது சிறுவன் மான்செஸ்டர் குழந்தைகள் மருத்துவமனையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
பெற்றோருக்கு சிறை தண்டனை
இந்நிலையில் 11 நாய்களை மோசமான நிலையில் சம்பந்தப்பட்ட சொத்தில் வைத்திருந்த சிறுவன் டேனியல் டவிங் பெற்றோர் மார்க் டவிங்(43) மற்றும் ஜோவான் பெட்ஃபோர்ட்(37) இருவர் மீதும் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தற்போது பெற்றோர் இருவரும் கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் கட்டுப்பாடு இல்லாமல் நாய் வளர்த்த குற்றத்திற்காக ஜோவான் பெட்ஃபோர்ட்-வுக்கு மூன்றரை ஆண்டுகள் மற்றும் மார்க் டவிங்-வுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்கள் 15 ஆண்டுகள் நாய் வளர்க்கவோ அல்லது வைத்திருக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |