ரூ 100 கோடி சம்பளம்... எதையும் செய்யவில்லை: இந்தியரை வேலையைவிட்டு நீக்கியதன் காரணம் கூறிய மஸ்க்
பல IIT பட்டதாரிகள் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் சிறந்த பல நிறுவனங்களுக்கு தலைமை தாங்குகிறார்கள்.
மின்னஞ்சல் மிரட்டல்
மதிப்புமிக்க கல்வி நிலையங்களில் பட்டப்படிப்பை முடித்த பிறகு அவர்கள் பெரும்பாலும் அதிக சம்பளத்திற்கு ஒப்பந்தம் செய்யப்படுகிறார்கள். அப்படியான ஒருவர் பராக் அகர்வால்.
எலோன் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் முன்னர் அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றவர். ஆனால் 2022ல் எலோன் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதும், தீவிர ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன், தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்ட இந்தியரையும் வேலையில் இருந்து அதிரடியாக நீக்கினார்.
தற்போது எலோன் மஸ்க் அமெரிக்க அரசாங்கத்தில் புதிய ஒரு துறையின் தலைமைப் பொறுப்பில் ஜனாதிபதி ட்ரம்பால் அமர்த்தப்பட்டுள்ளார். இந்த நிலையில், பெடரல் ஊழியர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பிய எலோன் மஸ்க், கடந்த வாரம் நீங்கள் செய்த பணி என்ன என்பதை தெரிவியுங்கள் என குறிப்பிட்டுள்ளதுடன், பதிலளிக்க மறுப்பவர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் மிரட்டல் விடுத்தார்.
இந்த விவகாரம் அமெரிக்காவில் கடும் அதிர்வலையை ஏற்படுத்த, மஸ்க் அதற்கு விளக்கமும் அளித்துள்ளார். ஆனால் டுவிட்டரில் ஒருவர் பராக் அகர்வாலை குறிப்பிட்டு தற்போது மஸ்கின் மின்னஞ்சல் தொடர்பில் பதிவிட்டிருந்தார்.
பராக் வேலை செய்யவில்லை
ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எலோன் மஸ்க் பராக் அகர்வாலிடம் கடந்த வாரம் என்ன செய்தார் என்று கேட்டார். தற்போது அவர் ஒவ்வொரு பெடரல் ஊழியரிடமும் இதே கேள்வியைக் கேட்கிறார் என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள மஸ்க், பராக் எந்த வேலையும் செய்யவில்லை, அதனால் பராக் வேலையில் இருந்து நீக்கப்பட்டார் என பதிலளித்துள்ளார். ஆண்டுக்கு சுமார் ரூ 100 கோடி சம்பளத்தில் டுவிட்டர் நிறுவனத்தால் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்புக்கு அமர்த்தப்பட்டவர் பராக் அகர்வால்.
ஆனால் பொறுப்பேற்ற ஒரே ஆண்டுக்குள் அவர் வேலையில் இருந்து நீக்கப்படும் சூழல் உருவானது. 2011ல் டுவிட்டர் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த அகர்வால் 2021 நவம்பர் மாதம் அந்த நிறுவனத்தின் உயரிய பொறுப்புக்கு வந்தார். தற்போது Parallel Web Systems Inc என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |