டுவிட்டர் புதிய CEO-வாக பொறுப்பேற்ற இந்தியர்! அவருக்கு வழங்கப்படும் ஊதியம் எவ்வளவு தெரியுமா?
டுவிட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) பராக் அகர்வாலின் ஊதியம் குறித்து தெரியவந்துள்ளது.
டுவிட்டர் சமூகவலைதளம் உலகளவில் மிகவும் பிரபலமானதாக இருக்கிறது. இதன் மூலம் தாங்கள் விரும்பும் கருத்துகளை ஊரறிய ஒரு நொடி பொழுதில் அறிவித்து விடலாம். அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், முக்கிய பிரமுகர்கள் என பெரும்பாலானோர் இதையே பயன்படுத்தி முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள்.
இந்த நிலையில் டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இருந்து வந்த இந்திய வம்சாவளி பராக் அக்ரவாலின் வளர்ச்சியையும் திறமையையும் கண்ட ஜாக் டோர்ஸி டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ பதவிக்கு பொருத்தமானவர் அக்ரவால் என கருதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து டுவிட்டர் நிறுவனத்தின் சிஇஓவாக பராக் அக்ரவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு ஆண்டுக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சம்பளமாக வழங்கப்படும் என தெரிகிறது. ஊதியம் தவிர போனஸ் உள்ளிட்ட பிற சலுகைகளும் பராக் அக்ரவாலுக்கு கிடைக்கும் என தெரியவந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மர் நகரில் பிறந்தவர் பராக் அகர்வால் என்பது குறிப்பிடத்தக்கது.