தங்கமகன் மாரியப்பனின் தம்பி மீது இளம்பெண்ணின் தந்தை பரபரப்பு புகார்
பாராலிம்பிக்கில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை தேடித்தந்த மாரியப்பன் தங்கவேலின் தம்பி கோபி(24) என்பவர், பவித்திரா (20) என்ற பெண்ணை கடத்தியதாக தீவட்டிப்பட்டி பொலிஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் கோபி -- பவித்ரா இருவரும் திருமணம் செய்து கொண்டு பொலிசில் சரணடைந்து இருப்பது பரபரப்பாக்கியுள்ளது.
கடந்த 27ம் திகதி பெரியவடகம்பட்டியைச் சேர்ந்த அண்ணாமலை(43) என்பவர் பவித்திராயை காணவில்லை என தீவட்டிப்பட்டி பொலிஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
இந்த நிலையில் விசாரணையை தொடங்கிய பொலிஸார், பெரியவடகம்பட்டியைச் சேர்ந்த தங்கவேல் மகன் கோபி (24) என்பவர் கடத்தியது தெரிவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து பவித்ராவை கடத்திய, கோபி (24) என்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என பவித்ராவின் உறவினர்கள் கூறிவந்தனர்.
பொலிஸார் கோபியை தேடிவந்த நிலையில், கோபி -- பவித்ரா இருவரும் திருமணம் செய்து கொண்டு ஓமலுார் மகளிர் பொலிஸ் ஸ்டேஷனில் சரணடைந்துள்ளனர்.
இந்த நிலையில் பொலிஸார் இருத்தரப்பினற்கிடையிலும் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.