மொபைல் பயன்படுத்தியதால் திட்டிய பெற்றோர்! அருவியில் குதிக்கும் பெண்ணின் ஷாக் வீடியோ
இந்தியாவில், மொபைல் போன் பயன்படுத்துவதாக பெற்றோர் திட்டியதால் அருவியில் குதிக்கும் சிறுமியின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோர் திட்டியதால் விபரீத முடிவு
சத்தீஸ்கர் மாநிலத்தில் பஸ்தாரில் உள்ள சிறுமியை, அவரது பெற்றோர் மொபைல் போன் பயன்படுத்துவதால் கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, அந்த சிறுமி சித்ரகோட் நீர்வீழ்ச்சியின் விளிம்பிற்கு வருவதற்கு சிறிது நேரம் அலைந்துள்ளார். பின்னர் விளிம்பிற்கு வந்த சிறுமியை கவனித்த அங்குள்ள சிலர், குதிக்க வேண்டாம் என்றும், அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம் என்றும் வற்புறுத்தினார்கள்.
ஆனால், அந்த சிறுமி கேட்காமல் அருவியில் இருந்து குதித்துள்ளார். பின்னர், அவர் சரிவில் இருந்து தப்பித்து, நீந்தி வந்து கரையை அடைந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று மாலை சித்ரகூட் சௌகி பகுதியில் நடந்துள்ளது.
இதனிடையே, அங்குள்ள சிலர் பொலிசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் அங்கு விரைந்து வந்த பொலிசார் துரிதமாக செயல்பட்டு சிறுமியை காப்பாற்றினர்.
இதனை, அப்பகுதியில் இருந்த ஒரு சில இளைஞர்கள் இந்த முழு சம்பவத்தையும் தங்கள் மொபைல் போன்களில் வீடியோ எடுத்தனர். அது, விரைவில் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
ஷாக் வீடியோ
இந்த வீடியோவில், பெண் ஒருவர் அருவியின் விளிம்பில் சில நொடிகள் நிற்பதைக் காட்டுகிறது. இந்திராவதி நதியில் இருந்து 38 கிமீ தொலைவில் அமைந்துள்ள சித்ரகோட் நீர்வீழ்ச்சியின் மேல் இருந்து அந்த பெண் குதிக்கிறார்.
#चित्रकोट वाटरफॉल में 90 फीट ऊंचाई से लड़की ने लगाई छलांग#Chhattisgarh #ChhattisgarhNews #viral #ViralVideo pic.twitter.com/2nvasLyBU2
— BHILAI TIMES (@bhilaitimes) July 19, 2023
இது உள்ளூர் மக்களால் "மினி நயாகரா நீர்வீழ்ச்சி" என்று அழைக்கப்படுகிறது. ஆச்சரியம் என்னவென்றால், சிறுமி குதித்த பிறகு தண்ணீரில் மிதந்து கரை ஒதுங்கினார்.
பொலிசார் விசாரணை
இச்சம்பவம் குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில், மொபைல் போனை பயன்படுத்திய சிறுமியை பெற்றோர் திட்டியதால் ஆபத்தான முயற்சி மேற்கொண்டது தெரிய வந்துள்ளது. பின்பு, சிறுமி குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
தினசரி ஏராளமான பார்வையாளர்களை ஈர்க்கும் சித்ரகோட் நீர்வீழ்ச்சியில் குறிப்பிடத்தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் இல்லை. துரதிர்ஷ்டவசமாக, கடந்த காலங்களில் இங்கு பல விபத்துகள் நடந்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |