10 ஆம் வகுப்பு தேர்வில் அனைத்து பாடங்களிலும் தோல்வி - கேக் வெட்டி கொண்டாடிய பெற்றோர்
தேர்வில் தங்களது குழந்தைகள் தோல்வியடைந்தால், பெற்றோர்கள் கண்டிப்பது தான் வழக்கம்.
ஆனால் கர்நாடகாவை சேர்ந்த பெற்றோர், தங்களது மகன் பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
கேக் வெட்டி கொண்டாடிய பெற்றோர்
கர்நாடக மாநிலம், பாகல்கோட்டை சேர்ந்த அபிஷேக் சோழச்சகுடா(Abhishek Cholachagudda) என்ற மாணவர் அங்குள்ள ஆங்கில வழிப் பள்ளி ஒன்றில், 10 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
சமீபத்தில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அபிஷேக் சோழச்சகுடா 600 க்கு 200 மதிப்பெண்கள்(32%) மட்டுமே பெற்று, எழுதிய 6 பாடங்களிலும் தோல்வியடைந்துள்ளார்.
அவரை கண்டிப்பதற்கு பதிலாக, அவர் அந்த ஏமாற்றத்தில் இருந்து மீண்டு வருவதற்காக, அவர் பெற்ற மதிப்பெண்களை கேக்கில் எழுதி, கேக் வெட்டி கொண்டாடி அவரை ஊக்கப்படுத்தியுள்ளனர் அவரது குடும்பத்தினர்.
நீ தேர்வில் தோல்வியடைந்தாலும், வாழ்க்கையில் தோல்வியடையவில்லை. எப்போதும் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து அடுத்த முறை வெற்றிபெறலாம் என அவரது பெற்றோர் அவரை ஊக்கப்படுத்தியுள்ளனர்.
அபிஷேக் தேர்வு சமயத்தில் நன்றாக படித்தும், அவருக்கு தேர்வு முடிவுகள் சரியாக வரவில்லை என அவரது தந்தை கூறியுள்ளார். அடுத்த முறை உறுதியாக தேர்வில் வெற்றி பெறுவேன் என அபிஷேக் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |