பிரித்தானியாவில் ஒரு வயது குழந்தை உயிரிழப்பு: பெற்றோர்கள் மீது குற்ற வழக்கு பதிவு
பிரித்தானியாவில் ஒரு வயது குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் செயின்ட் ஹெலன்ஸ் பகுதியை சேர்ந்த ஒரு வயது குழந்தை மா எரோ ஜான்சன்(Maero Johnson) உயிரிழந்த சம்பவத்தில், குழந்தையின் பெற்றோர்கள் கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்கின்றனர்.

குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் கிரிமினல் வழக்கை எதிர் கொள்ளும் தாய் மற்றும் தந்தையின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
மெர்சிசைடு காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், கைலி ஸ்மித்(25) மற்றும் ஆடம் ஜான்சன்(26) ஆகிய இருவரும் குழந்தை மா எரோ ஜான்சன் உயிரிழந்ததற்கு காரணமானவர்கள் அல்லது அனுமதித்தவர்கள் என்று குற்றஞ்சாட்டியுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்ததை அடுத்து பெற்றோர்கள் மீது இந்த குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், இந்த உயிரிழப்பு ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் கீட்டோனிக் ஹைப்போகிளிசீமியா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து பெற்றோர் மீது குழந்தையை பராமரிக்க தவறியது மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருளை வைத்திருந்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 13ம் திகதி இந்த வழக்கு லிவர்பூல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வரவுள்ள நிலையில் பெற்றோர்கள் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |