ராஜஸ்தானில் கைக்குழந்தை கடத்தல்.., சாமர்த்தியமாக மீட்ட பெற்றோர்
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில், மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த பகுதியில் தம்பதி ஒருவர் தங்களது கைக்குழந்தையுடன் சென்றுள்ளனர்.
அப்போது, குழந்தை திடீரென காணாமல் போனதால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
அந்த நேரத்தில், ஒரு பெண் குழந்தையை தூக்கிக் கொண்டு இருப்பதை அவர்கள் பார்த்துள்ளனர்.

பெற்றோர் அருகில் செல்லும் முன், அந்தப் பெண் தனது ஆண் நண்பருடன் குழந்தையை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றுள்ளார்.
இதைக் கவனித்த குழந்தையின் பெற்றோர், உடனே தங்களது காரில் பைக்கை பின்தொடர்ந்தனர்.
கிராமப்பகுதிக்குள் சென்றபோதும் விடாமல் துரத்தி, ஒரு இடத்தில் பைக்கை வழிமறித்து நிறுத்தினர். ஆனால், கடத்திய பெண், அது தங்களது குழந்தை என்று கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த தந்தை, அந்த பெண்ணையும் அவரது நண்பரையும் தாக்கினார். பின்னர், குழந்தையை பாதுகாப்பாக மீட்ட பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
அவர்களின் புகாரின் பேரில், குழந்தையை கடத்திய தம்பதியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |