பெற்ற மகளை மற்ற பிள்ளைகள் கண்முன்னே கொலை செய்த பெற்றோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி
தாங்கள் பார்த்த மாப்பிள்ளையை மணக்க மறுத்த மகளை, அவளது சகோதர சகோதரிகள் கண் முன்னேயே கதறக் கதறக் கொலை செய்துள்ளனர் ஒரு தம்பதியர்.
கௌரவக் கொலை
காலம் எவ்வளவோ முன்னேறியும் கௌரவக் கொலை என்னும் பெயரில் பெற்ற பிள்ளைகளைக் கொலை செய்யும் காட்டுமிராண்டித்தனம் மட்டும் இன்னமும் மாறவில்லை.
இப்போதும், ஆண்டுதோறும் 12 முதல் 15 பிள்ளைகள் பிரித்தானியாவில் கௌரவக் கொலை செய்யப்படுகிறார்கள் என்றால், வளர்ச்சி அடையாத நாடுகளில் நிலைமை எப்படி இருக்கும் என கணிக்கலாம்.
Image: Press Association
கட்டாயத் திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்
பாகிஸ்தான் நாட்டவர்களான Iftikhar மற்றும் Farzana Ahmed தம்பதியரின் பிள்ளைகளில் ஒருவர் Shafilea Ahmed. தான் ஒரு சட்டத்தரணியாகும் கனவில் இருக்க, பெற்றோரோ பாகிஸ்தானில் தன்னை ஒருவருக்கு கட்டாயத் திருமணம் செய்துவைக்க இருப்பதை அறிந்த Shafilea அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஆகவே, தங்கள் மற்ற பிள்ளைகள் கண் முன்னே Shafileaவைக் கொலை செய்துள்ளார்கள் அவளது பெற்றோர். இது நடந்தது 2003ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி. 2010வரை யாருக்கும் Shafilea எப்படி இறந்தாள் என்பது தெரியாது.
Image: Press Association
சகோதரி கூறிய அதிரவைக்கும் செய்தி
இந்நிலையில், 2010ஆம் ஆண்டு, Shafileaவின் சகோதரியான Alesha பொலிசாரிடம் சென்றிருக்கிறார். தன் சகோதரி Shafileaவை, தன் பெற்றோர் தங்கள் கண் முன்னே கொலை செய்ததாக அவர் கூறிய செய்தி கேட்டு பொலிசார் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
ஒரு சோஃபாவில் Shafileaவை தள்ளி, அவள் வாயில் பிளாஸ்டிக் கவரைத் திணித்துக் கொன்றதைத் தான் கண்டதாகவும், இந்த ரகசியத்தை அடக்கிவைத்ததால் ஏற்பட்ட அழுத்தத்தை தன்னால் தாங்கிக்கொள்ள இயலாததால் தான் பொலிசாரிடம் வந்ததாகவும் Alesha கூற, பொலிசார் விசாரணையைத் துவக்கியுள்ளார்கள்.
Image: PA
2004ஆம் ஆண்டு, Shafileaவின் உடல் கென்ட் நதியிலிருந்து அழுகிய நிலையில் மீட்கப்பட்டபோது தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்த அவரது பெற்றோர் முதலைக்கண்ணீர் வடித்தார்கள்.
Shafileaவின் பெற்றோர் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணையின் முடிவில் 2012ஆம் ஆண்டுதான் அவர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
Image: PA
இம்மாதம், அதாவது ஜூலை 14ஆம் திகதி, Shafileaவின் பிறந்தநாள். கௌரவக் கொலை செய்யப்பட்டவர்கள் நினைவாக அந்த நாள் அனுசரிக்கப்படும் நிலையில், Warringtonஇல் கூடிய பொலிசாரும் கௌரவக் கொலைக்கெதிராக பிரச்சாரம் செய்துவரும் தொண்டு நிறுவனத்தினரும் Shafileaவுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |