மகளின் பையில் இருந்த பொருள்! கொலை செய்து திராவகத்தை ஊற்றிய பெற்றோர்..விசாரணையில் அம்பலமான உண்மை
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் கர்ப்பத்தை கண்டுபிடிக்கும் கருவி மகளின் பையில் இருந்ததால் பெற்றோர் அவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாயமான இளம்பெண்
உத்தர பிரதேச மாநிலம் அலம்பாத் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நரேஷ். இவர் தனது மகளை காணவில்லை என பொலிஸாரிடம் புகார் அளித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து பொலிஸார் நடத்திய விசாரணையில் அதே கிராமத்திற்கு வெளியே அடையாளம் தெரியாத இளம்பெண்ணின் உடல் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே நரேஷ் மற்றும் அவரது மனைவியை அழைத்து அவர்களின் மகள் தான் என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தினர். அதன் பின்னர் இருவரிடமும் பொலிஸார் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தது.
Representative Image
நரேஷ் வாக்குமூலம்
நரேஷ் அளித்த வாக்குமூலத்தில், அவரது மகள் பல இளைஞர்களுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாகவும், அவரது பையில் கர்ப்பத்தைக் கண்டுபிடிக்கும் கருவி இருந்ததாகவும் கூறியுள்ளார்.
இதன் காரணமாக பல இளைஞர்களுடன் தனது மகள் தவறாக பழகி வந்துள்ளார் என சந்தேகமடைந்த தம்பதி, அப்பெண்ணை கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர்.
File Photo
பின் உடலை அடையாளம் தெரியாமல் மறைப்பதற்காக திராவகத்தை ஊற்றி கால்வாயில் தூக்கி வீசியுள்ளனர்.
இருவரிடமும் வாக்குமூலத்தை பெற்றுக் கொண்ட பொலிஸார் தம்பதிக்கு உதவி செய்த நரேஷின் சகோதரர்கள் இரண்டு பேர் என நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.