பிரான்சில் கலவரங்களில் ஈடுபடும் மாணவர்கள்: பெற்றோருக்கு சிக்கல்?
Parents in France could face financial penalties if their children participate in vandalism or looting during protests: பிரான்சில் கலவரங்களில் ஈடுபடும் மாணவர்களின் பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்படலாம்.
பிரான்சில் சென்ற மாதம் மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடத் துவங்கிய நிலையில், சில இடங்களில் பெற்றோர் கோபத்துடன் தங்கள் பிள்ளைகளை வீடுகளுக்கு இழுத்துச் செல்லும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகின.

பிள்ளைகளின் தவறுகளுக்கு, தாங்கள் தண்டிக்கப்படலாம் என்று கூட அவர்கள் அஞ்சியிருக்கலாம். விடயம் என்னவென்றால், அவர்களில் சிலர் அஞ்சியதுபோலவே, கலவரங்களில் ஈடுபடும் மாணவர்களின் பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
பெற்றோருக்கு அபராதம்
பிரெஞ்சு சிவில் சட்டத்தின் 1242ஆவது பிரிவின்படி, பிள்ளைகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெற்றோர், தங்கள் பிள்ளைகள் ஏற்படுத்தும் சேதங்களுக்கு பொறுப்பேற்கவேண்டும்.

அத்துடன், வன்முறைப் போராட்டங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, கலவரக்காரர்கள் தாங்கள் ஏற்படுத்திய சேதத்துக்காக பணம் செலுத்த வேண்டும் என்பது தொடர்பில் ஒரு மசோதா பிரான்ஸ் அரசால் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வரைவு மசோதா மீது, அக்டோபர் மாதம் 27ஆம் திகதி, பிரான்ஸ் அரசு விவாதம் நடத்த உள்ளது.
அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், நாசவேலைகளுக்குப் பொறுப்பானவர்கள் 10,000 யூரோக்கள் வரை இழப்பீடு செலுத்த வேண்டியிருக்கும்.
நாசவேலைகளில் ஈடுபட்டவர்கள் சிறார்கள் என்றால், அவர்களால் ஏற்படும் சேதங்களுக்கு, அவர்களுடைய பெற்றோர் பொறுப்பேற்கவேண்டிவரலாம்.