'முட்டாள் தனத்தின் உச்சம்' 666 அடி உயரத்தில் பிஞ்சு குழந்தையை வைத்துக்கொண்டு ரிஸ்க் எடுத்த பெற்றோர்: தீட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்
பிரித்தானியாவின் Yorkshire பகுதியில் 3 வயதுக்கு உட்பட்ட குழந்தையை தூக்கிக்கொண்டு மலை உச்சியின் விளிம்பில் முகாமிட்டு தங்கிய பெற்றோரை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் திட்டித் தீர்த்துவருகின்றனர்.
அண்மையில் பேரழிவு தரும் பல நிலச்சரிவுகளைக் கண்ட Yorkshire, Staithes-ல் உள்ள Cleveland Way trail பாதையில் ஒரு இளம் ஜோடி இந்த பயங்கரமான காரியத்தை செய்துள்ளனர்.
கிட்டத்தட்ட 666 அடி உயர உச்சியில், விளிம்பில் டென்ட் அடிக்கப்பட்டிருக்கும் கதி களங்கவைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
நேற்று, கடலோரக் காவல்படையினர் அப்பகுதிக்கு சென்று அவர்களை அந்த இடத்திலிருந்து பத்திரமாக வேறு இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்
மேலும், North Yorkshire பொலிஸ் அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று கொரோனா ஊரடங்கை மீறியது குறித்து விசாரணை நடத்தி, பின்னர் அறிவுரை கூறியுள்ளனர்.
இதே பகுதியில் கடந்த வாரம் 2 பேர் தனியாக தங்கியுள்ளனர், அவர்களில் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த நேரத்தில் உதவிக்காக வந்த பேரிடர் மீட்பு வீரர் ஒருவர் 500 அடி உயரத்திலிருந்து 100 அடிக்கு மலைப்பகுதியில் சரிந்து தவறி விழுந்தார். முகம் மற்றும் முதுகெலும்பில் பல எலும்பு முறிவுகள் ஏற்பட்டு அவர் இப்போது கவலைக்கிடமாக உள்ளார்.
இந்த நிலையில், ஒரு குழந்தையைக் தூக்கிக்கொண்டு பெற்றோர்கள் செய்துள்ள இந்த காரியம் மடத்தனத்தின் உச்சம் என சமூக வலைத்தளங்களில் மக்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.
மேலும் இந்த தவறுக்கு அவர்கள் நிச்சயம் தண்டனை அனுபவிக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

