பிரித்தானியாவில் குழந்தைகளுக்கான பால் பவுடரை திருட முயலும் பெற்றோர்: அதிர்ச்சியை உருவாக்கியுள்ள தகவல்
பிரித்தானியாவில் குழந்தைகளுக்கான பால் பவுடரின் விலை எக்கச்சக்கமாக உயர்ந்துள்ளதால், பால் பவுடரை திருடவும், கருப்புச் சந்தையில் வாங்கவும் பெற்றோர் முயல்வதாக செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
பால் பவுடர் விலை கடும் உயர்வு
பிரித்தானியாவில் குழந்தைகளுக்கான பால் பவுடர் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், பெற்றோர் பால் பவுடரை திருடவும், கருப்புச் சந்தையில் வாங்கவும் முயல்வதாகவும், பாலில் அதிக தண்ணீர் கலந்து பிள்ளைகளுக்குக் கொடுப்பதாகவும், பால் பவுடருக்கு மாற்றாக மில்க்மெய்ட் போன்ற செறிவூட்டப்பட்ட பால் தயாரிப்புகளில் தண்ணீர் கலந்து குழந்தைகளுக்கு உணவாகக் கொடுப்பதாகவும் தெரியவந்துள்ளது.
உணவு வங்கிகளைப் போன்று, குழந்தைகளுக்கான உணவுகள் முதலான பொருட்களை இலவசமாக அல்லது குறைந்த விலையில் கொடுக்கும் குழந்தை வங்கிகள் (Baby banks), தங்களிடம் குழந்தைகளின் பால் பவுடர் முதலான உணவுகளுக்காக வரும் பெற்றோரின் தேவைகளை முழுமையாக சந்திக்க முடியாத நிலை நாடெங்கும் நிலவுவதாக தெரிவித்துள்ளன.
Steph Capewell
ஏராளமானோர் குழந்தைகளின் உணவுக்காக வருவதால், அடுத்தடுத்து வரும் பெற்றோருக்கு தேவைப்படுமே என கருதி, ஒரு நபருக்கு இவ்வளவுதான் என கட்டுப்பாடுகள் விதிக்கத் துவங்கியுள்ளதாக சில குழந்தை வங்கிகள் தெரிவிக்கின்றன.
Kayla and Ivy
அரசு தலையிட கோரிக்கை
இப்படி, அடிப்படை விடயமான குழந்தைகள் உணவைக் கூட வாங்க முடியாத பெற்றோர்கள் ஏராளம் இருப்பதால், தங்களால் அவர்களுடைய தேவைகளை சந்திக்க முடியவில்லை என்று கூறும், உணவு வங்கிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள், இந்த விடயத்தில் அரசு தலையிடவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.
Jade holding Ivy
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |