மூன்று ஆண்டுகளுக்குமுன் விபத்தில் பலியான மகன்... உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோரின் ஒரே ஆசை
கனடாவில், மூன்று ஆண்டுகளுக்குமுன் ஹாக்கி வீரர்கள் பயணித்த பேருந்து ஒன்றுடன் ட்ரக் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
Saskatchewanஇல் நிகழ்ந்த அந்த பயங்கர விபத்தில் பலியான 16 இளைஞர்களில், 21 வயதான Logan Bouletம் ஒருவர். தன் பெற்றோர் சம்மதத்துடன் Logan உறுப்பு தானம் செய்ய பதிவு செய்திருந்ததால், ஆறு பேருக்கு உறுப்பு தானம் செய்து ஆறு பேர் உயிரைக் காப்பாற்றிவிட்டுத்தான் சென்றுள்ளார் Logan.
2018ஆம் ஆண்டு கனடாவில் 39 இதய மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெற்றன, அவற்றில் ஒன்று எங்கள் மகன் Loganஉடையது என்கிறார் அவரது தந்தையான Toby Boulet. Loganஇன் தாயான Bernadine Bouletஇன் தாய்க்கோ ஒரே ஒரு ஆசை.
நாம் சினிமாக்களில் எல்லாம் பார்ப்பதுண்டு அல்லவா, அதேபோல், தன் மகனின் இதயம் யாருக்கு தானமளிக்கப்பட்டுள்ளதோ, அவரை சந்தித்து, அவருக்கு பொருத்தப்பட்டுள்ள தன் மகனின் இதயத் துடிப்பை ஒரு முறையாவது கேட்க துடிக்கிறார் Loganஇன் தாயான Bernadine.
ஆனால், அவர்கள் வாழும் Saskatchewanஇல், தானமளித்தவர்களின் குடும்பத்தினரும், தானம் பெற்றவர்களின் குடும்பத்தினரும் சந்தித்துக்கொள்ள சட்டப்படி அனுமதி இல்லை.
எந்த அமைப்பு மூலம் தானம் நடைபெற்றதோ, அவர்கள் வழியாக பெயர் குறிப்பிடாமல் கடிதங்கள் வேண்டுமானால் பகிர்ந்துகொள்ளலாம் அவ்வளவுதான்.
ஆகவே, தங்கள் மகனுடைய இதயத்தைப் பெற்றவரை சந்திக்கும் அந்த தாயின் ஆசை நிறைவேறவில்லை.
உங்கள் மகன் நாட்டிலேயே புகழ்பெற்ற இதய தானம் செய்தவர் என்ற நிலை இருக்கும்போது, தானம் பெற்றவருடன் பெயர் குறிப்பிடாமல் எப்படி தொடர்பு கொள்வது என்கிறார் Loganஇன் தந்தையான Toby.
இதற்கிடையில், அந்த விபத்தில் பலியான ஹாக்கி வீரர்களை கௌரவிக்கும் வகையிலும், Loganஇன் உறுப்புதானம் விழிப்புணர்வை ஏற்படுத்தியதாலும், அவர்கள் அணிந்திருந்த பச்சை நிற சீருடையை நினைவுபடுத்தும்வகையில், இன்றைய தினத்தை, அதாவது ஏப்ரல் மாதம் 7ஆம் திகதியை Green Shirt Day ஆக கனடா நினைவுகூர்கிறது