உங்களுக்கு பணம் அதிகரிக்க வேண்டுமா? அப்போ பீரோவை இந்தப் பக்கம் வையுங்கள்
Vastu Tips
Astrology
By Nandhini
இந்த உலகில் வாழும் மக்களிடம் கடவுள் பக்தியும், நம்பிக்கையும் அதிகமாக இருக்கிறது. அதனால், ஒரு வீடு வாங்குபவர்கள் பூஜை அறை எங்கு வைப்பது, சமையல் அறை எங்கு வைப்பது, பீரோ எந்த திசையில் வைப்பது, கதவு எந்த பக்கம் வைப்பது என்று ஒவ்வொன்றையும் வாஸ்து பார்த்து, பார்த்து வைப்பார்கள்.
வீடு கட்டி முடித்துவிட்டால், பணம் சேமித்து வைக்க அடித்தளமாக இருக்கும் பீரோவை தான் வாஸ்துப்படி எங்கு வைக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்கு பீரோவை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று பார்ப்போம் -
- எப்போதுமே பீரோவை தென்மேற்கு திசையை பார்த்தபடி வைக்க வேண்டும். அப்போதுதான், பீரோவில் செல்வம் பெருகும். பீரோவின் பின்புறம் தென்திசையை நோக்கியும், கதவு பகுதி வடக்கு திசை நோக்கியும் இருக்க வேண்டும். இப்படி இருந்தால் மிகவும் நல்லது.
- பீரோ மேற்கு திசை பார்த்து வைத்தால் உங்களுடைய வருமானம் அதிகரிக்கும். சேமிப்பும் உயரும்.
- உங்கள் வீட்டில் நான்கு மூலைகளில் சற்று இடைவெளி விட்டுதான் பீரோவை வைக்க வேண்டும். அப்படி வைத்தால் வாயுபகவான் ஊடுருவிச் செல்வார். தப்பித்தவறி கூட சுவரையொட்டி பீரோவை வைத்து விடாதீர்கள். அப்படி வைத்தால் உங்களால் பணத்தை சேமிக்கவே முடியாதாம்.
- எப்போதுமே நம்முடைய மணிபர்ஸ், பூஜை அறை, பீரோ பணப்பெட்டியை உதாசீனப்படுத்தி பேசவோ, தூக்கிப் போடவோ கூடாதாம். அப்படி செய்தால் மகாலட்சுமி உங்கள் வீட்டில் வரவும் மாட்டாராம். வீட்டில் தங்கவும் மாட்டாராம்.
- பீரோவை வடமேற்கில் வைத்தால் உங்களுக்கு செலவு வந்துக்கொண்டே இருக்குமாம். கடன்கள் தொல்லைகள் அதிகரிக்குமாம். 6. தென்கிழக்கில் பணப்பெட்டியை வைத்தால் பணப்பிரச்சினை வருமாம். வீண் செலவுகள் ஏற்படுமாம்.
- தெற்கு மூலையில் பீரோவை வைக்க முடியாதவர்கள் பீரோவின் பின்புறம் மேற்கு பக்கமும், அதன் முன்புறம் கிழக்கு நோக்கி பார்த்தபடி வைக்கணுமாம். அப்படி இருந்தால் உங்கள் வீட்டிற்கு வரும் எதிர்மறை ஆற்றல் நீங்கிவிடுமாம். வீண் செலவுகள் குறைந்து விடுமாம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US